சந்திரசேகரனுக்கு அடித்தது ஜாக்பாட்.. டாடா சன்ஸ் தலைவராக தொடர அதிக வாய்ப்பு..!

By


சந்திரசேகரனுக்கு ஜாக்பாட்

இந்நிலையில் சந்திரசேகரனின் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவிக் காலம் முடிய உள்ள நிலையில் மீண்டும் அவரே தொடர அனைத்து விதமான தகுதிகளைப் பெற்று நிர்வாகம் ஒப்புதல் அளிக்கக் காத்துக்கொண்டு இருக்கிறது.

டாடா சன்ஸ் நிர்வாகம்

டாடா சன்ஸ் நிர்வாகம்

டாடா சன்ஸ் குழுமத்திற்கு நெருங்கிய பல அதிகாரிகள் அளித்த தகவல்கள் படி டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் சந்திரசேகரன் அவர்களை நியமிக்க அனைத்து தரப்பினரின் ஆதரவு இருப்பதாகவும், குறிப்பாக டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மற்றும் டாடா சேர்மன் ரத்தன் டாடா ஆகியோரின் ஆதரவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

பணிகாலம் நீட்டிப்பு

பணிகாலம் நீட்டிப்பு

சமீபத்தில் டாடா குழுமத்தில் சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாகம் செய்த மாற்றங்கள், அதன் மூலம் ஏற்பட்ட வளர்ச்சி ஆகியவை டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவால் அதிகளவில் பாராட்டப்பட்டது. இதன் வாயிலாகச் சந்திர சேகரன் 2வது முறையாகப் பதவியில் அமரப்போவது உறுதியாகியுள்ளது.

எதிர்கால வளர்ச்சி

எதிர்கால வளர்ச்சி

சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாகம் டாடா குழுமத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகப்பெரிய திட்டத்தை வகுத்துள்ளது. இது மட்டும் டாடா குழுமத்தின் வளர்ச்சிக்குத் தடையாகவும், சுமையாகவும் இருக்கும் பலவற்றைச் சீர்படுத்தி மறுசீரமைப்புச் செய்துள்ளார்.

சைரஸ் மிஸ்திரி வழக்கு

சைரஸ் மிஸ்திரி வழக்கு

இதுபோல் சைரஸ் மிஸ்திரி தொடுத்த வழக்கில் டாடா சன்ஸ் வெற்றிபெற மிகவும் உறுதுணையாகவும், திறம்படச் செயல்பட்டது டாடா குழுமத் தலைவர்கள் மட்டும் அல்லாமல் நாட்டின் பிற நிறுவனத் தலைவர்களும் வெகுவாகப் பாராட்டினர்.

10 லட்சம் கோடி ரூபாய்

10 லட்சம் கோடி ரூபாய்

என்.சந்திரசேகரன் தலைமையில் டாடா குழும நிறுவனங்களின் பங்குகளின் மொத்த மதிப்பு மே மாதம், வரலாற்றில் முதல் முறையாக 10 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டைத் தாண்டியுள்ளது புதிய சாதனை படைத்தார். இது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியிலும் பாராட்டப்பட்டது.Source link

Leave a Comment