தங்கம் விலை ஆறாவது நாளாக சரிவு.. இன்றைய விலை நிலவரம் என்ன.. எவ்வளவு குறைந்திருக்கு..!

By


சரிவில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படும் நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சரிவில் காணப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பானது சற்று வலுவாக காணப்படும் நிலையில், இது தங்கத்தினை விலையில் சரிவினை காண முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

பெரியளவில் மாற்றமில்லை

பெரியளவில் மாற்றமில்லை

எனினும் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்பட்டாலும், பெரியளவில் சரிவில் காணப்படவில்லை. எப்படியிருப்பினும் தங்கத்தின் முக்கிய லெவலான 1800 டாலர்களுக்கு அருகிலேயே காணப்படுகிறது. இது உடைத்து இன்னும் கீழாக தொடருமா? இல்லை இப்படியே ஏற்றம் காணுமா என்ற சந்தேகம் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

உச்சத்தில் இருந்து ரூ.8,700 சரிவு

உச்சத்தில் இருந்து ரூ.8,700 சரிவு

இன்று தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், இது இம்மாத தொடக்கத்தில் இருந்து இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 1000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. இதே வரலாற்று உச்சத்தில் இருந்து 8,700 ரூபாய்க்கும் மேல் சரிவில் காணப்படுகிறது.

ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்களுக்கு இது சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. எனினும் இந்திய சந்தையினை பொறுத்தவரையில் நடப்பு ஆக்ஸ்ட் கான்ட்ராக்ட், ஆக்ஸ்ட் 5 அன்று எக்ஸ்பெய்ரி என்பதால் அடுத்த கான்ட்ராக்டில் வாங்கலாம்.

கொரோனா பரவல் குறித்த அச்சம்

கொரோனா பரவல் குறித்த அச்சம்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கமானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது மீண்டும் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் எனவும், இது சந்தையில் ஒரு நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. ஆக இதுவும் பாதுகாப்பு புகலிடமாக தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.

பங்கு சந்தைகள் ஏற்றம்

பங்கு சந்தைகள் ஏற்றம்

கடந்த சில தினங்களாகவே அமெரிக்க பங்கு சந்தைகள் சரிவில் காணப்பட்டதையடுத்து, ஆசிய சந்தைகளும் சரிவில் காணப்பட்டன. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியது. இது தங்கம் விலையானது அவ்வப்போது ஏற்றம் காண வாய்ப்பாக அமைந்தது. எனினும் இன்று பங்கு சந்தைகள் ஏற்றத்தில் காணப்படும் நிலையில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது.

ஏற்ற இறக்கமாக் இருக்கலாம்

ஏற்ற இறக்கமாக் இருக்கலாம்

அமெரிக்காவின் வேலையின்மை நலன் குறித்தான தரவு மற்றும் வீடு விற்பனை குறித்தான தரவுகள் இன்று வெளியாகவிருக்கும் நிலையில், இதுவும் தங்கம் விலையில் பெரியளவில் மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் இன்று மாலை அமர்வில் பெரியளவிலான மாற்றத்தினை காணலாம்.

கவனிக்க வேண்டிய காரணிகள்

கவனிக்க வேண்டிய காரணிகள்

சர்வதேச அளவில் ஏற்படும் அரசியல் பதற்றங்கள், நிதி நெருக்கடிகள், பணவீக்கம், பொருளாதாரம், அமெரிக்க பத்திர லாபம், உருமாறிய கொரோனா பரவல், லாக்டவுன் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல முக்கிய காரணிகளும் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய காரணிகளாக உள்ளன. ஆக முதலீட்டு ரீதியில் தங்கத்தின் தேவையானது நீண்டகால நோக்கில் அதிகமாகவே உள்ளது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவல் – 1794 – 1782 டாலர்களாகும்.

ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் – 1814 – 1824 டாலர்களாகும்.

இந்திய சந்தையில் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவல் – 47,465, 47,357, 47,107 ரூபாயாகும்

ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் -. 47,715, 47,857, 48,107 ரூபாயாகும்.

வெள்ளியின் முக்கிய சப்போர்ட் லெவல் – 66,722, 66,307, 65,658 ரூபாயாகும்

ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் -. 67,371, 67,605, 68,254 ரூபாயாகும்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 4.95 டாலர்கள் குறைந்து, 1798.45 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவினை விட, இன்று சற்று கீழாகத் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. எனினும் இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது விலை அவுன்ஸூக்கு 0.22% குறைந்து, 25.200 டாலர்களாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது, தற்போது 10 கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து, 47,463 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்கலாம்.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையில் இன்று வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 169 ரூபாய் குறைந்து, 66,968 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது, 30 ரூபாய் குறைந்து, 4,500 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, 36,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 41 ரூபாய் குறைந்து, 4,901 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 328 ரூபாய் குறைந்து, 39,208 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

தங்கம் விலையானது குறைந்திருந்தாலும், ஆபரண வெள்ளி விலையானது சற்று அதிகரித்து வருகின்றது. இன்று கிராமுக்கு 40 பைசா அதிகரித்து, 71.90 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 71,900 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக வெள்ளி விலையானது தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே இருந்தாலும், இன்று மாலை வெளியாகவிருக்கும் அமெரிக்காவின் சில முக்கிய டேட்டாக்கள் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது. இதே ஆபரண தங்கம் என்பது நீண்டகால நோக்கில் தேவையானது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.



Source link

Leave a Comment