தங்கம் விலை உச்சத்தில் இருந்து ரூ.8000 சரிவு.. இன்றைய விலை நிலவரம் என்ன.. வாங்கலாமா..!

By


ஏற்றத்திற்கு என்ன காரணம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் காணப்படும் நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. இது அமெரிக்க ஃபெடரல் வங்கியானது அதன் பாலிசியினை கடுமையாக்கலாம் என எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஏற்றத்தில் காணப்படுகிறது. இதற்கிடையில் டாலரின் மதிப்பு என்னவாகுமோ என்ற கருத்தும் நிலவி வருகின்றது. இதுவும் தங்கத்திற்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

உச்சத்தில் இருந்து சரிவு

உச்சத்தில் இருந்து சரிவு

இன்று தங்கம் விலையானது அதிகரித்து காணப்பட்டாலும், இம்மாத தொடக்கத்தில் இருந்து இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவில் காணப்படுகிறது. இதே வரலாற்று உச்சத்தில் இருந்து 8000 ரூபாய் சரிவில் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்களுக்கு இது சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

உருமாறிய கொரோனா பரவல்

உருமாறிய கொரோனா பரவல்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கமானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் எனவும், இது நிலையற்ற தன்மையை ஏற்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கம் விலை ஏற்றம் காண வாய்ப்பாக அமைந்துள்ளது.

பங்கு சந்தைகள் சரிவு

பங்கு சந்தைகள் சரிவு

அமெரிக்க பங்கு சந்தைகள் சரிவில் முடிந்ததையடுத்து, ஆசிய சந்தைகளும் சரிவில் காணப்படுகின்றன. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் இரண்டாவது நாளாக தொடர்ந்து சரிவினை கண்டு வருகின்றது. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது.

அமெரிக்க பத்திர சந்தை

அமெரிக்க பத்திர சந்தை

அமெரிக்க பத்திர சந்தையானது சரிவினைக் கண்டு வரும் நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு முதலீடுகளை மாற்ற தூண்டுகின்றது. ஆக இதுவும் தங்கத்திற்கு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அதோடு குறைவான வட்டி விகிதமும் தங்கத்தினை வாங்க தூண்டலாம்.

கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா தாக்கத்தின் காரணமாக, மக்களை இங்கிலாந்துக்கு பயணிப்பது குறித்து அமெரிக்கா எச்சரித்துள்ளது. இது இன்னும் இனி வரும் காலத்தில் இந்த கட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய பரவலானது முந்தைய பரவலை விட சவாலான விஷயமாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது பொருளாதாரத்திலும், மக்கள் மத்தியிலும் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதாரம் என்னவாகுமோ?

பொருளாதாரம் என்னவாகுமோ?

தங்கமானது அரசியல் பதற்றங்கள், நிதி நெருக்கடிகள், பணவீக்கம், பொருளாதாரம் உள்ளிட்ட பல காரணங்களுக்கும் மத்தியில் சிறந்த பாதுகாப்பு புகலிடமாக பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டு ரீதியில் தங்கத்தின் தேவையானது நீண்டகால நோக்கில் அதிகமாகவே உள்ளது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 8.65 டாலர்கள் அதிகரித்து, 1817.90 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவினை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ள நிலையில், முந்தைய அமர்வின் உச்சத்தினையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. எனினும் இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது விலை அவுன்ஸூக்கு 0.32% அதிகரித்து, 25.225 டாலர்களாக காணப்படுகிறது. ஆக வெள்ளியினை மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை, தற்போது 10 கிராமுக்கு 136 ரூபாய் அதிகரித்து, 48,230 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக இதுவும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்கலாம்.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையில் இன்று வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 89 ரூபாய் அதிகரித்து, 67,335 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது, 20 ரூபாய் அதிகரித்து, 4,566 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 36,528 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 25 ரூபாய் அதிகரித்து, 4,981 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 39,848 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

தங்கம் விலையானது அதிகரித்திருந்தாலும், தொடர்ந்து ஆபரண வெள்ளி விலையானது குறைந்து வருகின்றது. இன்று கிராமுக்கு 60 பைசா குறைந்து, 72.30 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 600 ரூபாய் குறைந்து, 72,300 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக வெள்ளி விலையானது தொடர்ந்து குறைந்து வருகின்றது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே உள்ளது. எனினும் வெள்ளியின் விலையும் மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியினை பொறுத்த வரையில், தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால் நீண்டகால நோக்கில் வாங்கலாம். பேப்பர் தங்கத்தினையும் நீண்டகால நோக்கிலும் வாங்கி வைக்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.Source link

Leave a Comment