தங்கம் விலை சரிவு.. தங்க நகை வாங்க மக்கள் ஆர்வம்..!

By


தங்கம் விலை

செப்டம்பர் 15ஆம் தேதி தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்து கணிசமான சரிவை மட்டுமே பதிவு செய்துள்ளது. ஆனால் வெள்ளி விலை பெரிய அளவிலான சரிவைப் பதிவு செய்துள்ளது.

 அமெரிக்காவின் பணவீக்க தரவுகள்

அமெரிக்காவின் பணவீக்க தரவுகள்

அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மற்றும் ஐரோப்பிய சந்தை துவக்கத்தில் தங்கம் விலை சரிய துவங்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் சந்தை நிலவரம்

எம்சிஎக்ஸ் சந்தை நிலவரம்

எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.24 சதவீதம் சரிந்து 47,147 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது, இதேபோல் ஒரு கிலோ வெள்ளி விலை 0.36 சதவீதம் குறைந்து 63,359 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தை விலை

சர்வதேச சந்தை விலை

அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் வெளியான பின்பும் தங்கம் விலை சரிய துவங்கியுள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,783.56 டாலராக இருந்த நிலையில் பணவீக்க தரவுகள் வெளியான பின்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் 1,808.12 டாலர் வரையில் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது.

தொடர் சரிவு

தொடர் சரிவு

ஆனால் இன்று காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து படிப்படியாகக் குறைந்து வரும் காரணத்தால் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,800 டாலர் அளவீட்டை இழந்து 1,798 டாலர் வரையில் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதன் வெளிப்பாடு இந்தியச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது என்றால் மிகையில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் கணிப்பு

தமிழ் குட்ரிட்டன்ஸ் கணிப்பு

ஏற்கனவே தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் கணித்தது போல் அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அமெரிக்காவின் நுகர்வோர் விலை பணவீக்கம் ஜூலை மாதத்தை ஒப்பிடுகையில் 0.3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இது கணிக்கப்பட்ட அளவைவிடவும் குறைவான அளவீடு என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா

சீனா

அமெரிக்காவை போலவே சீனாவிலும் பொருளாதார வளர்ச்சி அளவீடுகள் பாதிப்பு, உற்பத்தி பாதிப்பு, அதிகரித்து வரும் கொரோனா, சீன அரசு டெக் நிறுவனங்கள் மீது எடுத்து வரும் நடவடிக்கைகள், அண்டை நாடுகள் உடனான பிரச்சனை எனப் பல பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.

தங்கத்தில் லாபம்

தங்கத்தில் லாபம்

இதனால் சர்வதேச முதலீட்டுச் சந்தையில் அதிகளவிலான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலியாகத் தங்கம் விலையிலும் அதிகப்படியான மாற்றங்கள் உருவாக உள்ளது, 2020ல் ஏற்பட்டது போல் தங்கம் விலை 56,000 ரூபாய் அளவீட்டைத் தொடவில்லை என்றாலும் குறிப்பிடத்தக்க அளவிலான உயர்வை எதிர்கொள்ளும்.

மக்கள் ஆர்வம்

மக்கள் ஆர்வம்

கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வரும் காரணத்தால் குறிப்பிட சதவீத மக்கள் தங்க நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கிராமங்கள் மற்றும் சிறு டவுன் பகுதிகளைக் காட்டிலும் பெரு நகரங்களில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.Source link

Leave a Comment