தங்கம் விலை தொடர் சரிவு.. நல்ல வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க..!

By


நடுத்தர மக்கள்

குறிப்பாக நடுத்தர மக்கள் மத்தியில் தங்கம் வங்கி வைப்பு நிதியை விடவும் அதிகமாக விரும்பப்படும் ஒரு முதலீட்டுத் திட்டமாகப் பார்க்கின்றனர். சொல்லப்போனால் இந்தக் கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பை மற்றும் வருமானத்தை இழந்த பல கோடி குடும்பங்களைக் காப்பாற்றியது தங்கம் நகைகள் என்றால் வியப்பு இல்லை.

தங்கம் மற்றும் தங்க நகைகள்

தங்கம் மற்றும் தங்க நகைகள்

அந்த அளவிற்கு இந்திய மக்கள் மத்தியில் தங்கம் மற்றும் தங்க நகைகள் மிகவும் முக்கியமாக இருக்கும் வேளையில் தங்கத்தை வாங்கும் முன்பு இன்றைய விலை நிலவரத்தை தெரிந்துகொண்டு வாங்குவது மிகவும் முக்கியமாக உள்ளது. அதேபோல் தங்கத்தை முதலீடாகப் பார்க்கும் அனைவரும் தங்கம் விலை எதனால் குறைகிறது என்பதைக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

உள்நாட்டுச் சந்தை மற்றும் சர்வதேச சந்தை

உள்நாட்டுச் சந்தை மற்றும் சர்வதேச சந்தை

உள்நாட்டுச் சந்தையில் விலை மாறுபட்டாலும், சர்வதேச சந்தை மூலம் தங்கம் விலை பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பதைப் புரிந்துகொண்டு முதலீடு செய்தால் அதிகளவிலான லாபம் கிடைக்கும். இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து தொடர்ந்து மந்தமான சூழ்நிலையைப் பதிவு செய்து வருகிறது.

ரீடைல் பணவீக்கம் 4 மாத சரிவு

ரீடைல் பணவீக்கம் 4 மாத சரிவு

ஒருபக்கம் இந்திய சந்தையில் ரீடைல் பணவீக்கம் 4 மாத சரிவை அடைந்துள்ளதாலும், இன்று மாலை அமெரிக்கச் சந்தையின் நுகர்வோர் விலை குறியீடு தரவுகள் வெளியாக உள்ளதால், தங்க முதலீட்டுச் சந்தை செவ்வாய்க்கிழமை வர்த்தகம் துவங்கியதில் இருந்து மந்த நிலை பதிவு செய்து வருகிறது.

எம்சிஎஸ் சந்தை தங்கம் விலை

எம்சிஎஸ் சந்தை தங்கம் விலை

இந்நிலையில் இன்று எம்சிஎஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.02 சதவீதம் குறைந்து 46,897 ரூபாய்க்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது. செவ்வாய்க்கிழமை வர்த்தகம் துவங்கியதில் இருந்து தொடர்ந்து மந்தமாகவே இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இன்றைய வெள்ளி விலை

இன்றைய வெள்ளி விலை

இதேபோல் எம்சிஎஸ் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை பெரும் சரிவில் இருந்து மீண்டு உள்ளது. ஆனாலும் நேற்றைய விலையை விடவும் சுமார் 200 ரூபாய் குறைவாகவே உள்ளது. இன்று MCX சந்தையில் ஒரு கிலோ வெள்ளி விலை 0.09 சதவீதம் சரிந்து 63,239 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி மீது இருந்த டிமாண்ட் தொடர்ந்து குறைந்து வரும் காரணத்தால் வெள்ளி விலை கடந்த சில வாரங்களாகவே சரிந்து வருகிறது.

ஸ்பாட் மார்கெட் விலை

ஸ்பாட் மார்கெட் விலை

மேலும் இன்று ஸ்பாட் மார்கெட்டில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 46,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடுவது மட்டும் அல்லாமல் ஜிஎஸ்டி, செய்கூலி, சேதாரம் ஆகியவற்றின் மூலம் அதிகளவில் மாறுபடும்.

60 ரூபாய் சரிவு

60 ரூபாய் சரிவு

இதேபோல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 47,070 ரூபாயில் இருந்து இன்று 47,010 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதன் மூலம் 10 கிராமிற்கு 60 ரூபாயும், கிராமுக்கு 6 ரூபாயும் குறைந்துள்ளது. இது பெரிய அளவிலான மாற்றம் இல்லை என்றாலும் சந்தை நிலவரத்திற்கு ஏற்பட்ட இந்த விலை நிலவரம் உள்ளது.

தங்கம் மீது முதலீடு செய்யலாமா.?

தங்கம் மீது முதலீடு செய்யலாமா.?

நீண்ட கால அடிப்படையில் தங்கத்திற்கு அதிகப்படியான லாபம் உள்ளது எனக் கூறப்பட்டு வரும் நிலையில் குறுகிய கால வர்த்தகத்தில் தங்கம் மீதான லாபம் சற்று குறைவாகவே இருக்கும் என ஆய்வுகள் கூறுகிறது. ஆனால் இவை அனைத்தையும் மாற்றும் சக்தி அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் சந்தைக்கு உள்ளது என்றால் மிகையில்லை. ஏன் என்ன காரணம் என்பதை இப்போது பார்ப்போம்.

இந்திய ரீடைல் பணவீக்கம்

இந்திய ரீடைல் பணவீக்கம்

இந்தியாவில் ரீடைல் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 5.3 சதவீதம் வரையில் குறைந்து 4 மாத சரிவைப் பதிவு செய்தது. ரீடைல் பணவீக்கம் குறைய மிக முக்கியமான காரணம் உணவு பொருட்கள் விலை குறைந்ததது தான், இதன் மூலம் ரிசர்வ் வங்கி அடுத்த சில காலாண்டுகளுக்குத் தனது குறைவான வட்டி விகிதத்தைத் தொடர வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

ரிசர்வ் வங்கி வட்டி உயர்வு

ரிசர்வ் வங்கி வட்டி உயர்வு

ஆனால் இதே வேளையில் இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்திருந்தால் ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தைக் குறைக்கவும், விலைவாசியைக் கட்டுப்படுத்தவும் வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும், ஆனால் தற்போது வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை.

அமெரிக்காவில் என்ன நிலை

அமெரிக்காவில் என்ன நிலை

அமெரிக்காவில் இந்த நிலை முற்றிலும் மாறுபட்டது என்றால் மிகையில்லை, அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பு ஏற்கனவே அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தைப் பாதித்து வரும் நிலையில் இன்று அமெரிக்க அரசு தனது நுகர்வோர் விலைக் குறியீடு மற்றும் core CPI தரவுகளையும் வெளியிட உள்ளது.

அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்

அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்

இந்தத் தரவுகள் மோசமாக இருந்தால் அடுத்த மாதம் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வெளியிட உள்ள நாணய கொள்கையில் முக்கிய மாற்றத்தை அறிவிக்க வேண்டிய கட்டாயம் உருவாகும்.

பொருளாதாரத் தளர்வுகளை

பொருளாதாரத் தளர்வுகளை

ஏற்கனவே பெடரல் ரிசர்வ் 2021ஆம் ஆண்டு இறுதியில் இருந்து பணப்புழக்கத்தையும், அரசு அறிவித்துள்ள தளர்வுகளையும் குறைக்க முடிவு செய்துள்ள நிலையில் இந்த CPI தரவுகள் மிக முக்கியமான மாற்றத்தைச் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதிப்பு என்ன..?

பாதிப்பு என்ன..?

இதனால் தங்கம் விலையில் மட்டும் அல்ல பங்குச்சந்தை முதலீட்டிலும் பெரும் மாற்றம் ஏற்படும். காரணம் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தினால் கட்டாயம் பத்திர சந்தையில் அதிகளவிலான முதலீடுகள் குவியும் இதனால் பங்குச்சந்தை முதல் தங்கம் வரை அனைத்தும் பாதிக்கப்படும்.

எனவே தங்கம் மீது பெரிய தொகையை முதலீடு செய்வோர் கவனமான சந்தை நிலவரத்தைத் தெரிந்து கொண்டு முதலீடு செய்வது உத்தமம்.Source link

Leave a Comment