தசரா பண்டிகை எதிரொலி: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..!

By


பெட்ரோல், டீசல் விலை

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரீடைல் எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் செவ்வாய் மற்றும் புதன்கிழமை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை என்றாலும், இந்தியாவில் எரிபொருள் விலை வரலாற்று உச்சத்தில் உள்ளது.

செப்டம்பர் 5 முதல்

செப்டம்பர் 5 முதல்

செப்டம்பர் 5ஆம் தேதி வரையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் இருந்து பெட்ரோல், டீசல் விலை OPEC கூட்டத்திற்குப் பின்பு தொடர்ந்து விலையை அதிகரித்து வருகிறது. மத்திய அரசுக்கு பெட்ரோல், டீசல் விற்பனையில் அதிகப்படியான வரி வருமானம் கிடைக்கும் என்பதால் தொடர்ந்து விலையை உயர்த்தி வந்தது.

சப்ளை டிமாண்ட் பிரச்சனை

சப்ளை டிமாண்ட் பிரச்சனை

ஆனால் இதேவேளையில் உலக நாடுகளில் அதிகப்படியான எரிபொருள் தேவை இருக்கும் காரணத்தாலும், கச்சா எண்ணெய் உற்பத்தி பெரிய அளவில் அதிகரிக்கப்படாத காரணத்தாலும் சப்ளை டிமாண்ட் பிரச்சனையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 75 டாலரில் இருந்து 83 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை சரிவு

கச்சா எண்ணெய் விலை சரிவு

கடந்த 2 நாட்களாகக் கச்சா எண்ணெய் விலை கணிசமாகச் சரிவை சந்தித்துள்ள போதிலும் இந்தியாவில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படாமல் உள்ளது. இதேவேளையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 75.25 ரூபாயாக உள்ளது.

சென்னை பெட்ரோல் டீசல் விலை

சென்னை பெட்ரோல் டீசல் விலை

இரண்டு நாட்களாகப் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாத நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.79 ரூபாய்க்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 97.59 ரூபாயாக உள்ளது.Source link

Leave a Comment