தடாலடியாக சரிந்த பிட்காயின்.. 30,000 டாலருக்கு கீழ் சரிவு..!

By


சீனாவின் தடை

சீனாவில் பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சி தடை செய்த பின்பு சந்தையில் பிட்காயின் சப்ளை குறைந்து அதன் விலை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகக் கணிக்கப்பட்ட நிலையில், பிட்காயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.

பிட்காயின் மதிப்பு

பிட்காயின் மதிப்பு

இன்றைய வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் 30000 டாலருக்குக் கீழ் சரிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் எப்போதும் பல ஏற்ற இறக்கம் இருந்தாலும் முதல் முறையாக 5 சதவீதம் வரையில் சரிந்து 29,700 டாலர் வரையில் பிட்காயின் குறைந்துள்ளது.

பிட்காயின் வளர்ச்சி

பிட்காயின் வளர்ச்சி

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் அதிகப்படியாக ஒரு பிட்காயின் விலை 29,306.77 டா ர் வரையில் குறைந்துள்ளது. இன்றைய சரிவின் மூலம் 2021ஆம் ஆண்டில் பிட்காயின் வளர்ச்சி அளவீடு 1.87 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஐரோப்பிய மத்திய வங்கி

ஐரோப்பிய மத்திய வங்கி

இன்றைய சரிவுக்கு மிக முக்கியக் காரணம் ஐரோப்பிய மத்திய வங்கி வெளியிட்டுள்ள டிஜிட்டல் யூரோ தான் எனக் கூறப்படுகிறது. அதேவேளையில் எல் சால்வடோர் நாட்டில் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்தும் பெரிய அளவிலான தாக்கம் சந்தையில் ஏற்படவில்லை என்பதால் இதன் எதிர்காலம் இனி கேள்விக்குறி தான் என்கிற நிலை உருவாகியுள்ளது.

பிட்காயின் கணிப்பு

பிட்காயின் கணிப்பு

அதேபோல் இந்த வருடம் பிட்காயின் மதிப்பு 20000 டாலர் அளவிற்குக் குறையவும் வாய்ப்பு உள்ளது எனச் சிங்கப்பூர் நாட்டின் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனமான லூனோ நிறுவனத்தின் ஆசிய வர்த்தகப் பிரிவு தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment