தமிழ்நாடு அரசு 35 நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம்.. ரூ.17,141 கோடி முதலீடு.. 55,054 பேருக்கு வேலைவாய்ப்பு..!

By


ஸ்டாலின் தலைமையிலான அரசு

செவ்வாய்க்கிழமை மட்டும் ஸ்டாலின் தலைமையிலான அரசு சுமார் 35 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் துவங்குவதற்காகவும், முதலீடு செய்வதற்காகவும் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் சுமார் 17,141 கோடி ரூபாய் முதலீட்டை தமிழ்நாடு பெற உள்ளது.

 35 நிறுவனங்கள் ஒப்பந்தம்

35 நிறுவனங்கள் ஒப்பந்தம்

இந்த 35 நிறுவனத்தின் வாயிலாக மட்டுமே தமிழ்நாட்டில் 55,054 பேருக்கு வேலைவாய்ப்பு பெற முடியும், மேலும் இந்தக் கூட்டம் நடந்த அதேவேளையில் 9 நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்திற்காக அடிக்கல் நாட்டியுள்ளது. இதேபோல் 5 நிறுவனங்கள் வர்த்தகத்தைத் துவக்கிவைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

 மக்கள் வரவேற்பு

மக்கள் வரவேற்பு

ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் முதல் வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் என்பதால், மக்கள் கவனக்தை ஈர்த்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் துறைவாரியான பல திட்டங்களை வகுத்து வருகிறது தமிழ்நாடு அரசு.

 JSW எனர்ஜி

JSW எனர்ஜி

புதிதாக ஒப்பந்தம் செய்துள்ள 35 நிறுவனத்தில் மிகவும் முக்கியமான நிறுவனமாக JSW எனர்ஜி உள்ளது. இந்நிறுவனம் சுமார் 3000 கோடி ரூபாய் முதலீட்டில் தூத்துக்குடி, திருப்பூர், திருநெல்வேலி ஆகிய பகுதிகள் renewable energy மின்சார உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இந்த 3 தொழிற்சாலையில் மட்டும் சுமார் 1600 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க முடியும் என JSW எனர்ஜி தெரிவித்துள்ளது.

 பிற முக்கிய நிறுவனங்கள்

பிற முக்கிய நிறுவனங்கள்

இதைத் தொடர்ந்து 1500 கோடி ரூபாய் முதலீட்டில் கேப்பிடாலேண்டு நிறுவனம் அம்பத்தூர் பகுதியில் டேட்டா சென்டர் அமைக்கவும், டிசிஎஸ் ஐடி/ஐடிஸ் பிரிவில் 900 கோடி ரூபாய் முதலீடு செய்யவும், திரவ ஆக்சிஜன் தயாரிக்கும் ஐநாக்ஸ் ஏர் பிராடெக்ட்ஸ் நிறுவனம் ஒசூரில் 150 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய தொழிற்சாலையும், ஏரோஸ்பேஸ் துறையில் தொழில்நுட்ப தளத்தை அமைக்க ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் ஒப்பந்தம் செய்ய உள்ளது.

 தங்கம் தென்னரசு

தங்கம் தென்னரசு

செவ்வாய்கிழமை ஒப்பந்தம் செய்யப்பட்ட, அடிக்கல் நாட்டப்பட்ட, துவங்கப்பட்ட சுமார் 47 நிறுவனங்கள் இணைந்து தமிழ்நாட்டில் 28,664 கோடி ரூபாய் முதலீட்டை செய்யவும், இதன் மூலம் 82,400 வேலைவாய்ப்புகளையும் உருவாக்க உள்ளது எனத் தொழிற்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

 அதிமுக அரசு

அதிமுக அரசு

செவ்வாய்க்கிழமை துவங்கப்பட்ட மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட நிறுவனங்கள் அதிமுகத் தலைமையிலான அரசின் ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுத் தற்போது துவங்கப்பட்டு உள்ளது.Source link

Leave a Comment