பக்ரீத் பண்டிகையன்றே சரிந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு பாருங்க.. !

By


COMEX தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்றோடு தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக சரிவினைக் கண்டு வருகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 2.65 டாலர்கள் குறைந்து, 1,808.65 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தொடங்கியுள்ளது. இன்று சற்று மீடியம் டெர்மில் குறையும் விதமாகவே காணப்படுகிறது.

COMEX வெள்ளி விலை

COMEX வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது, தங்கம் விலையை போலவே சற்று குறைந்து தான் காணப்படுகிறது. தற்போது 0.33% குறைந்து, 24.910 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் முந்தைய அமர்வினைக் காட்டிலும், சற்று கீழாகத் தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

MCX தங்கம் & வெள்ளி விலை

MCX தங்கம் & வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் சந்தையினை பொறுத்தவரையில் இன்று பக்ரீத் பண்டிகை ஆதலால் காலை அமர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் மாலை 5 மணிக்கு சந்தை தொடங்கவுள்ளது. ஆக சர்வதேச சந்தையின் எதிரொலி மாலை இருக்கலாம். எப்படி இருப்பினும் முதலீட்டாளர்கள் சற்று கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

ஆபரண தங்கம்

ஆபரண தங்கம்

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் (22 கேரட்) விலையானது கிராமுக்கு 36 ரூபாய் குறைந்து, 4530 ரூபாயாகவும், இதே சவரன் விலையானது 288 ரூபாய் குறைந்து 36,240 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த 2 தினங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் (24 கேரட்) விலையானது கிராமுக்கு 39 ரூபாய் குறைந்து, 4,942 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து 39,536 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 49,420 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு 80 பைசா குறைந்து, 71.50 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 800 ரூபாய் குறைந்து, 71,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.. வெள்ளியின் விலையானது கடந்த ஆறு தினங்களில் ஒரு நாள் மட்டுமே மாற்றமில்லாத நிலையில் மற்ற 5 நாட்கள் சரிவிலேயே காணப்படுகிறது.

இனி தங்கம் விலை எப்படி இருக்கும்?

இனி தங்கம் விலை எப்படி இருக்கும்?

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. இது பங்கு சந்தைகள் தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், அமெரிக்க பத்திர சந்தையும் சற்று சரிவில் காணப்படுகிறது. இதையடுத்து இந்திய சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகிறது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மீடியம் டெர்மில் எப்படியுள்ளது?

மீடியம் டெர்மில் எப்படியுள்ளது?

தங்கம் விலையானது சர்வேதேச சந்தையில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சற்று சரிவில் காணப்படுகிறது. குறிப்பாக டாலரின் மதிப்பு சற்று வலுவடைந்ததையடுத்து சற்று சரிவில் காணப்பட்டது. டெக்னிக்கலாகவும் சந்தை சற்று சரியும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து அதிகரிக்கலாம் என்பதை போலவே காணப்படுகிறது.

குறைந்த விலையில் வாங்க ஆர்வம்

குறைந்த விலையில் வாங்க ஆர்வம்

நீண்டகால நோக்கில் தங்கத்தினை வாங்க நினைக்கும் வர்த்தகர்கள், குறைந்த விலையில் கிடைக்கும்போது அதனை வாங்க ஆர்வம் காட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு நிபுணர்களின் கணிப்பினை போலவே தங்கம் விலையானது தொடர்ந்து 1800 டாலர்களுக்கு மேலாகவே இருந்து வருகின்றது. ஆக இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாகவே அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவல் பற்றிய அச்சம்

கொரோனா பரவல் பற்றிய அச்சம்

தங்கம் விலையானது உருமாறிய கொரோனா பரவலானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையில் மூன்றாவது அலை வந்தால், இது இன்னும் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினையும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சந்தையானது சரிவினைக் கண்டு வருகின்றன. எனினும் இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.Source link

Leave a Comment