பக்ரீத் பண்டிகையையொட்டி இந்திய பங்குச்சந்தை விடுமுறை.. அமெரிக்க, ஆசிய சந்தைகள் வளர்ச்சி..!

By


மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாகச் சர்வதேசச் சந்தையின் தாக்கத்தின் காரணமாக அதிகளவிலான சரிவைச் சந்தித்து வருகிறது. 53000 புள்ளிகள் வர்த்தகம் செய்யப்பட்டு வந்த சென்செக்ஸ் குறியீடு நேற்றை வர்த்தக முடிவில் 52,198.51 புள்ளிகளை அடைந்துள்ளது.

ஐடி, வங்கி, உற்பத்தி, எனர்ஜி

ஐடி, வங்கி, உற்பத்தி, எனர்ஜி

இந்தத் தொடர் சரிவின் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் டாப் நிறுவனங்களும் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக ஐடி, வங்கி, உற்பத்தி, எனர்ஜி துறை பங்குகள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.

நிஃப்டி சந்தை

நிஃப்டி சந்தை

நிஃப்டி சந்தையில் ஸ்மால்கேப், மிட்கே பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகளவிலான சரிவைப் பதிவு செய்து வருகிறது. இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் மியூச்சவல் பண்ட் முதலீட்டாளர்களும் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறார்கள்.

3வது கொரோனா அலை

3வது கொரோனா அலை

இந்திய சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு மிக முக்கியக் காரணம் 3வது அலை உலக நாடுகளில் துவங்கியுள்ளதும், உலக நாடுகளில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி பாதிப்புகள் காரணமாகப் பங்குச்சந்தையில் இருந்து அதிகளவிலான முதலீடுகள் கடந்த 2 நாட்களாக வெளியேற்றப்பட்டது

அமெரிக்கச் சந்தை

அமெரிக்கச் சந்தை

அதைத் தாண்டி அமெரிக்கச் சந்தையில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகமான காரணத்தால் அந்நாட்டின் பத்திர முதலீட்டில் கிடைக்கும் லாப அளவீடுகள் இரண்டு நாட்களாகக் குறைந்தது.

சர்வதேச முதலீட்டு சந்தை

சர்வதேச முதலீட்டு சந்தை

அமெரிக்கச் சந்தையின் சரிவின் காரணமாகவும், அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாகவும் ஆசிய சந்தை, ஐரோப்பிய சந்தையும் தொடர்ந்து சரிந்து வந்தது. இதனால் இந்திய சந்தையும் சரிவடைந்தது.

அமெரிக்கச் சந்தை வளர்ச்சி

அமெரிக்கச் சந்தை வளர்ச்சி

செவ்வாய்க்கிழமை அமெரிக்கச் சந்தை 2 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து 4 மாதத்தில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அமெரிக்கப் பங்குச்சந்தையின் எஸ் அண்ட் பி 500 குறியீடு செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 1.52 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் நாஸ்டாக் குறியீடு 1.57 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

ஆசிய சந்தை வளர்ச்சி

ஆசிய சந்தை வளர்ச்சி

அமெரிக்கச் சந்தையில் கொரோனா பீதி, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றைத் தாண்டி முதலீட்டு அளவு அதிகரித்து வளர்ச்சிப் பாதைக்குச் சென்றுள்ளது. இதன் எதிரொலியாக ஆசியச் சந்தையில் ஜப்பான், சீனா, கொரியா, ஆஸ்திரேலியா, தைவான் ஆகிய சந்தைகள் வளர்ச்சியுடன் காணப்படுகிறது.Source link

Leave a Comment