பெருங்குடி டூ நியூயார்க்.. அமெரிக்காவில் ஐபிஓ வெளியிடும் சென்னை நிறுவனம்..!

By


சென்னை நிறுவனம்

இதனை மையமாக வைத்து சென்னையைத் தலைமையிடமாக வைத்துக்கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் FreshWorks நிறுவனம் தனது சக போட்டி நிறுவனத்திற்கு இணையாக உயர வேண்டும் என்ற திட்டத்தில் இந்தியாவில் ஐபிஓ வெளியிடாமல், அமெரிக்காவில் தனது நிறுவனத்தைப் பட்டியலிட முடிவு செய்துள்ளது.

FreshWorks நிறுவனம்

FreshWorks நிறுவனம்

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயக்கும் நாட்டின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்றான FreshWorks நிறுவனம், அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் பட்டியலிட்டு சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடாகத் திரட்ட திட்டமிட்டுள்ளது.

912 மில்லியன் டாலர் முதலீடு

912 மில்லியன் டாலர் முதலீடு

இந்தியாவின் முன்னணி SaaS ஸ்டார்ட்அப் நிறுவனமாக FreshWorks அமெரிக்காவின் செக்யூரிட்ஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் அமைப்பிற்குச் சமர்ப்பித்த அறிக்கையில், FreshWorks நிறுவனம் கிளாஸ் ஏ பங்குகளை 28 முதல் 32 டாலர் விலையில் சுமார் 798 மில்லியன் டாலர் முதல் 912 மில்லியன் டாலர் வரையிலான முதலீட்டைத் திரட்ட உள்ளதாக அறிவித்துள்ளது.

9 பில்லியன் டாலர் மதிப்பீடு

9 பில்லியன் டாலர் மதிப்பீடு

இதன் படி FreshWorks நிறுவனம் சுமார் 9 பில்லியன் டாலர் வரையிலான மதிப்பீட்டைப் பெற உள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் போஸ்மேன் என்ற மென்பொருள் வெளியிட்டபோது 5.6 பில்லியன் டாலர் அளவிலான மதிப்பீட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கிளாஸ் ஏ பங்குகள்

கிளாஸ் ஏ பங்குகள்

FreshWorks நிறுவனம் தற்போது வெளியிடும் கிளாஸ் ஏ பங்குகள் மூலம் முதலீட்டாளர்கள் நேரடியாக நிர்வாக முடிவில் வாக்கு அளிக்கும் உரிமையைப் பெறுவார்கள். இதனால் பெரும் முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தில் முதலீட்டுச் செய்ய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

ஆனால் கிளாஸ் பி பங்குகளின் மொத்த வாக்கு உரிமையில் 98.9 சதவீதமாக இருக்கும் காரணத்தால் கிளாஸ் ஏ பங்குகள் உரிமையாளர்களின் வாக்கு உரிமை பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த முடியாது.

11 வருட ஸ்டார்ட்அப்

11 வருட ஸ்டார்ட்அப்

11 வருடமாக இயங்கி வரும் FreshWorks நிறுவனம் சென்னை மற்றும் கலிபோர்னியா ஆகிய இரு இடங்களைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. FreshWorks நிறுவனம் அமெரிக்காவில் இயங்கினாலும் பெரும் பகுதி டெக் மற்றும் ஆப்ரேஷன்ஸ் ஊழியர்கள் சென்னையில் இருந்து தான் பணியாற்றுகின்றனர்.

சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்திற்குப் போட்டி

சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்திற்குப் போட்டி

FreshWorks நிறுவனம் தற்போது அமெரிக்காவின் முன்னணி டெக் சேவை நிறுவனங்களில் ஒன்றான சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்திற்கு நேரடி போட்டி நிறுவனமாகும். சென்னையில் இருந்து ஒரு நிறுவனம் அமெரிக்காவில் ஐபிஓ வெளியிடுவது என்பது அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.

கிரிஷ் மாத்ருபூதம் - FreshWorks சிஇஓ

கிரிஷ் மாத்ருபூதம் – FreshWorks சிஇஓ

FreshWorks நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான கிரிஷ் மாத்ருபூதம் தஞ்சாவூரில் இருக்கும் சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் 1996ஆம் ஆண்டுப் பி.இ பட்டம் பெற்றார், இதைத் தொடர்ந்து மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் 1998ஆம் ஆண்டு மார்கெட்டிங் பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்றார்.

கிரிஷ் மாத்ருபூதம் - ZOHO

கிரிஷ் மாத்ருபூதம் – ZOHO

படிப்பை முடித்த கிரிஷ் மாத்ருபூதம் ஹெச்சிஎல் சிஸ்கோ நிறுவனத்தில் 1.3 வருடம் பணியாற்றினார். அதன் பின்பு ஈபோர்ஸ், AdventNet ஆகிய இரு நிறுவனத்தில் 5 வருடம் பணியாற்றினார். அதன் பின்பு சென்னையின் மற்றொரு முன்னணி நிறுவனமான ZOHO நிறுவனத்தில் பல உயர் பதவியில் 5 வருடம் பணியாற்றினார்.

50,000 வாடிக்கையாளர்கள்

50,000 வாடிக்கையாளர்கள்

ZOHO நிறுவனத்தில் பிராடெக் மேனேஜ்மென்ட் பிரிவின் துணைத் தலைவராகப் பணியாற்றிய கிரிஷ் மாத்ருபூதம் அக்டோபர் 2010ல் FreshWorks நிறுவனத்தை நிறுவி இன்று மிகப்பெரிய நிறுவனமாக வளர்ச்சி அடைந்துள்ளார். FreshWorks நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் சுமார் 50,000த்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.Source link

Leave a Comment