முகேஷ் அம்பானி-க்கு அதிர்ஷ்டம் தான்.. ரூ.26,538 கோடி அரசு திட்டத்தில் அதிக லாபம்..!

By


அட்டோமொபைல் துறை PLI திட்டம்

அட்டோமொபைல் துறை PLI திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இந்த PLI திட்டத்தில் பேட்டரி மற்றும் ஹைட்ரஜன் Fuel Cell உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகச் சிறப்புச் சலுகை வழங்கப்பட்டு உள்ளதாக அறிவித்தார்.

 பேட்டரி மற்றும் ஹைட்ரஜன் Fuel Cell

பேட்டரி மற்றும் ஹைட்ரஜன் Fuel Cell

இந்தியாவில் பேட்டரி மற்றும் ஹைட்ரஜன் Fuel Cell தயாரிக்கும் நிறுவனங்களுக்கு PLI திட்டத்தின் கீழ் கூடுதலாக 5 சதவீதம் ஊக்கத்தொகை அளிக்கப்பட உள்ளது என்று அனுராக் தாக்கூர் கூறினார்.

இதேபோல் பிற பொதுவான உற்பத்தி நிறுவனங்களுக்கு 8 முதல் 13 சதவீதம் வரையிலான ஊக்கத்திட்டம் வழங்கப்பட உள்ளது எனவும் கூறினார் தெரிவித்தார்.

 முகேஷ் அம்பானியின் கிரீன் எனர்ஜி திட்டம்

முகேஷ் அம்பானியின் கிரீன் எனர்ஜி திட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆன முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் கிரீன் எனர்ஜி பிரிவில் 4 தொழிற்சாலைகளை உருவாக்க 75,000 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

 4 தொழிற்சாலைகள்

4 தொழிற்சாலைகள்

இந்த 4 தொழிற்சாலைகளில் இரு தொழிற்சாலைகள் ஹைட்ரஜன் வாயுவையும், மற்ற இரு தொழிற்சாலைகள் சோலார் மற்றும் பேட்டரி தயாரிக்கும் வர்த்தகத்தைத் தொடர்புடையது.

தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள ஆட்டோமொபைல் PLI திட்டத்தின் கீழ் பேட்டரி மற்றும் ஹைட்ரஜன் Fuel Cell தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்குக் கூடுதலாக 5 சதவீத ஊக்கத் தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் ரிலையன்ஸ் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் அதிக லாபத்தை அடைய உள்ளது.

 ஹைட்ரஜன் Fuel Cell

ஹைட்ரஜன் Fuel Cell

இந்தியாவில் கிரீன் ஹைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்ய Electrolyser தொழிற்சாலையும், ஹைட்ரஜன் வாயுவை கார் முதல் அனைத்து வாகனங்களிலும் எரிபொருளாகப் பயன்படுத்த உதவும் ஹைட்ரஜன் பியூயல் செல் தயாரிக்கும் தொழிற்சாலையை உருவாக்கும் பணிகளைத் துவங்கப்பட்டு உள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

 பேட்டரி தயாரிப்பு

பேட்டரி தயாரிப்பு

இதேபோல் எலக்ட்ரிக் கார் முதல் அனைத்து வாகனங்களில் பயன்படுத்தும் பேட்டரியை தயாரிக்கும் தொழிற்சாலை உருவாக்கும் பணிகளையும் துவங்கியுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

 அம்பிரி உடன் கூட்டணி

அம்பிரி உடன் கூட்டணி

இந்தியாவில் பேட்டரி உற்பத்தியை சிறப்பான முறையில் செயல்படுத்த அமெரிக்காவில் இருக்கும் மாசசூசெட்ஸ் பகுதியில் இருக்கும் அம்பிரி (Ambri) நிறுவனத்தில் பில் கேட்ஸ் உடன் இணைந்து ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் நிறுவனம் சுமார் 50 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்து சுமார் 42.3 மில்லியன் பங்குகளைப் பெற்றுள்ளது.

 லித்திம் ஐயன் பேட்டரி

லித்திம் ஐயன் பேட்டரி

அம்பிரி நிறுவனம் தயாரித்துள்ள லித்திம் ஐயன் பேட்டரி நீண்ட நேரம் எனர்ஜியை சேமிக்கும் வல்லமை கொண்டது. இந்தப் பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் வடிவத்திற்கு அம்பிரி காப்புரிமை பெற்றுள்ளது.

 இந்தியாவில் பேட்டரி தொழிற்சாலை

இந்தியாவில் பேட்டரி தொழிற்சாலை

இப்புதிய முதலீட்டின் மூலம் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் மற்றும் அம்பிரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பேட்டரியை தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கப் பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளதாகச் சில வாரங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

 ரீலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ்-க்கு அதிக நன்மை

ரீலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ்-க்கு அதிக நன்மை

இதன் மூலம் ஆட்டோமொபைல் துறையில் அறிவிக்கப்பட்டு உள்ள 5 சதவீதம் கூடுதலான ஊக்கத் தொகை மூலம் ரீலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் அதிகளவிலான நன்மை அடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

 முகேஷ் அம்பானி ட்ரோன் திட்டம்

முகேஷ் அம்பானி ட்ரோன் திட்டம்

இதேபோல் இந்தியாவில் ட்ரான் தயாரிக்கவும், அதன் உற்பத்தியைப் பெரிய அளவில் மேம்படுத்தவும் நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோரின் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

 ஏஸ்ட்ரியா ஏரோஸ்பேஸ்,

ஏஸ்ட்ரியா ஏரோஸ்பேஸ்,

சில நாட்களுக்கு முன்பு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கீழ் இருக்கும் ஏஸ்ட்ரியா ஏரோஸ்பேஸ், அதானி குழுமத்தின் கீழ் இருக்கும் அதானி டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ், ஐடியாபோர்ஜ் டெக்னாலஜி, டைனமேட்டிக் டெக்னாலஜிஸ் என 4 நிறுவனங்கள் ட்ரோன் உற்பத்தி அல்லது அசம்பிளி பிரிவை விரிவாக்கம் செய்ய விருப்பம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 120 கோடி ரூபாய் PLI திட்டம்

120 கோடி ரூபாய் PLI திட்டம்

தற்போது மோடி அரசு இந்தியாவில் ட்ரோன் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்பதற்காகச் சுமார் 120 கோடி ரூபாய் அளவிலான PLI ஊக்குவிப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இதன் வாயிலாகவும் அம்பானி அதிகப் பலன்களை அனுபவிக்கிறார்.

 மோடி அரசு

மோடி அரசு

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ள PLI திட்டம் மூலம் ஊக்கத் தொகை பெற வேண்டும் என்றால் இரு சக்கரம் மற்றும் 3 சக்கர வாகன உற்பத்தியாளர்கள் அடுத்த 5 வருடத்தில் 1000 கோடி ரூபாயும், ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் உற்பத்தியாளர்கள் அடுத்த 5 வருடத்தில் 500 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்ய வேண்டும்.

 7 லட்சம் வேலைவாய்ப்புகள்

7 லட்சம் வேலைவாய்ப்புகள்

இந்த PLI திட்டம் மூலம் இந்திய ஆட்டோமொபைல் துறையில் மட்டும் சுமார் 7 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என மோடி தலைமையிலான அரசு நம்புகிறது. மேலும் இந்திய ஆட்டோமொபைல் துறையில் உற்பத்தி அதிகரிப்பதன் மூலம் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மேம்படும்.Source link

Leave a Comment