மூன்றாவது நாளாக ஏற்றத்தில் சந்தைகள்.. மீண்டும் 60,600 தாண்டிய சென்செக்ஸ்..!

By


ரூபாய் மதிப்பு சரிவு

இதற்கிடையில் இன்று பல காரணிகளும் சந்தைக்கு சாதகமாக அமைந்திருந்தாலும், தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையானது உச்சம் தொட்டு வருகின்றது. இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பானது 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவினை எட்டியுள்ளது. அதோடு அன்னிய முதலீடுகளூம் தொடர்ந்து வெளியேறத் தொடங்கியுள்ளன. எனினும் இது சந்தையானது தொடர்ந்து மூன்று தினங்களாக மீண்டும் உச்சத்தினை தொட்டு வரும் நிலையில், புராபிட் செய்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

கடந்த அமர்வில் 278.32 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளார்கள் விற்றும், உள்நாட்டு முதலீட்டாளார்கள் 741.22 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கினை விற்றும் வெளியேறியுள்ளனர்.

இதற்கிடையில் அமெரிக்க பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றத்தினைக் கண்டு வரும் நிலையில், இது டாலரின் மதிப்பு ஏற்றம் காண வழிவகுத்துள்ளது. இதுவும் ரூபாய் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 438.17 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 60,722.48 புள்ளிகளாகவும், நிஃப்டி 153.20 புள்ளிகள் அதிகரித்து, 18,145.20 புள்ளிகளாகவும் ஏற்றம் கண்டு காணப்படுகிறது. இதனையடுத்து சென்செக்ஸ் 201.01 புள்ளிகள் அதிகரித்து, 60,485.32 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 82.50 புள்ளிகள் அதிகரித்து, 18,074.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1480 பங்குகள் ஏற்றத்திலும், 407 பங்குகள் சரிவிலும், 74 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி ஆட்டோ 3% மேலாக ஏற்றம் கண்டும், பிஎஸ்இ மெட்டல்ஸ் 1% மேலாக ஏற்றம் கண்டும் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் 1% கீழாக ஏற்றத்தில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், எம்& எம், டைட்டன் நிறுவனம், பவர் கிரிட் கார்ப், டாடா கன்சியூமர் புராடக்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஓ.என்.ஜி.சி, கோல் இந்தியா, ஹெச்.யு.எல், ஈச்சர் மோட்டார்ஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எம்&எம், டைட்டன் நிறுவனம், பவர் கிரிட் கார்ப், டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.யு.எல், ஐடிசி, நெஸ்டில், டாக்டர் ரெட்டீல்ஸ் லேபாரட்டீஸ், ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது சற்று அதிகரித்து 75.31 ரூபாயாக காணப்படுகின்றது.

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 359.71 புள்ளிகள் அதிகரித்து, 60,644 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 132.95 புள்ளிகள் அதிகரித்து, 18,124.90 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.Source link

Leave a Comment