மோடி அரசின் புதிய திட்டம் ‘கதிசக்தி’.. இந்திய உள்கட்டமைப்பு துறைக்கு ஜாக்பாட்..!

By


கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு

இந்திய கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு துறை திட்டங்களுக்குப் பல அரசு அமைப்புகளிடம் இருந்து ஒப்புதல், அனுமதி, பணிகளைச் செய்ய வேண்டி உள்ளது. இதில் அதிகளவிலான தாமதம் மற்றும் நிலையற்ற தன்மை இருக்கும் நிலையில், அனைத்து துறைகளை ஒரு முனையில் இணைக்கும் விதமாக இந்த கதிசக்தி திட்டம் இயங்க உள்ளது.

 கதிசக்தி திட்டம்

கதிசக்தி திட்டம்

இந்த கதிசக்தி திட்டம் மூலம் அரசு துறை மற்றும் அமைப்பு மத்தியில் இருக்கும் தடைகளை நீக்கப்பட்டு விமானம் முதல் சாலை, கப்பல் என அனைத்து துறை உள்கட்டமைப்பு திட்டங்களை ஒரு முனையில் ஒப்புதல் பெற்று செயல்படுத்த உள்ளது.

 ஓரே தளம்

ஓரே தளம்

அது மட்டும் அல்லாமல் கதிசக்தி திட்டத்தில் ஒரு திட்டத்தில் ஒரு துறை, எந்த பணிகளைச் செய்து வருகிறது என்பதைப் பிற துறைகள் கண்காணிக்க முடியும். நாட்டின் உள்கட்டமைப்பு திட்டத்தில் அரசு சார்ந்த அனைத்து பணிகளையும் ஓரே இடத்தில் செயல்படுத்துதற்கு multi-modal connectivity மூலம் centralised portal உருவாக்கப்பட உள்ளது.

 மாஸ்டர் பிளான்

மாஸ்டர் பிளான்

உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான centralised portal மூலம் அரசு அமைப்புகள் இணைப்பது மூலம் சரக்கு, சேவை, மக்களுக்கான வாய்ப்புகளை எவ்விதமான தடையும் இல்லாமல் இயக்க முடியும்.

 வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்புகள்

இந்த திட்டம் மூலம் இந்தியாவில் குறைந்த காலகட்டத்தில் உள்கட்டுமான திட்டங்களுக்கு வேகமாக ஒப்புதல் அளிக்கப்படுவதன் மூலம் அதிகப்படியான வேலைவாய்ப்பை உருவாக்கப்படுவது மட்டும் அல்லாமல் சரக்கு போக்குவரத்து செலவுகளைக் குறைக்க முடியும். இதன் மூலம் நாட்டின் சப்ளை செயின் தளம் உலக தரத்தில் மேம்படுத்த முடியும்.

 கதிசக்தி யோஜனா திட்டம்

கதிசக்தி யோஜனா திட்டம்

பிரதமர் மோடி இன்று அறிமுகம் செய்துள்ள பிரதான் மந்திரி கதிசக்தி யோஜனா திட்டம் விரிவான தன்மை, முன்னுரிமை, ஆப்டிமைஸ், அனைத்து துறையுடன் ஒத்திசைவு, பகுப்பாய்வு மற்றும் டைனமிக் ஆகியவையற்ற 6 தூண்களாக அமையும்.

தாமதம்

தாமதம்

இந்த கதிசக்தி திட்டம் மூலம் ரயில்வே, விமான போக்குவரத்து, சாலை, கப்பல் மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்கள் என அனைத்து துறை சார்ந்த திட்டத்திற்கான ஒப்புதல்களை ஒரே இடத்தில் அனைத்து நிறுவனங்களும் பெற முடியும். இது ஒரு திட்டத்தில் இருக்கும் கால தாமதத்தைப் பெரிய அளவில் குறைக்க முடியும்.Source link

Leave a Comment