Tuesday, March 9, 2021
Home Money ரிலையன்ஸ் - பியூச்சர் டீல் மீது தற்காலிக தடை உத்தரவு.. அமேசானுக்கு வெற்றி..!

ரிலையன்ஸ் – பியூச்சர் டீல் மீது தற்காலிக தடை உத்தரவு.. அமேசானுக்கு வெற்றி..!


தற்காலிக தடை விதிப்பு

டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கடந்த வாரம் ரிலையன்ஸ் – பியூச்சர் குரூப்-க்குச் சாதகமாக அமைந்த நிலையில், அமெரிக்க ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. இந்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம் அமேசானுக்குச் சாதகமான தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது.

தற்காலிக தடை விதிப்பு

தற்காலிக தடை விதிப்பு

இன்று வழங்கிய தீர்ப்பில், டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்துவிட்டுச் செபி, CCI, பங்குச்சந்தை போன்ற கட்டுப்பாட்டு ஆணையங்கள் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கத் தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுமட்டும் அல்லாமல் அமேசான் நிறுவனத்தின் மனுவிற்குப் பதில் அளிக்கும் வகையில் பியூச்சர் ரீடைல் நிறுவனத்திடம் இருந்து எழுத்துப் பூர்வமான பதிலைக் கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமேசான் மனு

அமேசான் மனு

மேலும் அமேசான் சமர்ப்பித்துள்ள மனு மற்றும் அதன் மீதான பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் பதில் ஆகியவற்றை ஆய்வு செய்யும் அடுத்த விசாரணை 5 வாரங்களுக்குப் பின் நடத்தப்படும் என நீதிபதி ரோஹின்டன் எப்.நரிமன் தலைமையிலான இருவர் அடங்கிய நீதிபதி குழு விசாரிக்க உள்ளது.

சிங்கப்பூர் நடுவர் அமைப்பு

சிங்கப்பூர் நடுவர் அமைப்பு

கடந்த வருடம் நடைபெற்ற ரிலையன்ஸ் – பியூச்சர் குரூப் ஒப்பந்தத்திற்கு எதிராக அமேசான் சிங்கப்பூர் நடுவர் அமைப்பில் தொடுத்த வழக்கிலும் அமேசானுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் முதல் முறையாக இவ்வழக்கு சென்றுள்ள நிலையிலும் அமேசானுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இதன் எதிரொலியாக இன்று பங்குச்சந்தை வர்த்தகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆன முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் மதிப்பு 3.2 சதவீதம் சரிந்து ஒரு பங்கு விலை 2007 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் இன்றைய வர்த்தகத்தில் தனது ஆஸ்தான அளவீடான 2000 ரூபாயில் இருந்து 1995 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

விளையாட்டாய் சில கதைகள்: இந்திய அணியின் இளம் கீப்பர்

Published : 09 Mar 2021 03:11 am Updated : 09 Mar 2021 06:14 am   Published : 09 Mar...

COVID Cases: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்று வழக்குகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக 18,000 க்கு மேல் பதிவாகியுள்ளன. மொத்த கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 1,12,29,398 ஆக அதிகரித்துள்ளதாக திங்களன்று...

மேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்

மேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...

Recent Comments