ரூ.8,900-மேல் சரிவில் தங்கம்.. தங்கத்தினை வாங்க இது தான் சரியான நேரம்.. ஏன் என்ன காரணம்..!

By


பத்திர சந்தை சரிவு

கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அமெரிக்காவின் பத்திர சந்தையின் மதிப்பு, தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், பத்திர சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது எனலாம். இந்த நிலையில் தான் அமெரிக்க டாலரின் மதிப்பும் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்தது.

இதற்கிடையில் தற்போது முதலீட்டாளர்கள் பத்திர சந்தையில் புராபிட் புக்கிங் செய்யும் விதமாக, தங்களது பத்திரங்களை விற்று வரும் நிலையில், பத்திர சந்தையானது மீண்டும் சற்று சரிவினை காணத் தொடங்கியுள்ளது.

டாலரின் மதிப்பில் அழுத்தம்

டாலரின் மதிப்பில் அழுத்தம்

இதற்கிடையில் வரவிருக்கும் நவம்பர் மாதம் முதல் கொண்டு அமெரிக்காவில் பத்திரம் வாங்குதலும் படிப்படியாக குறைக்க ஆரம்பிக்கலாம் என்று அமெரிக்க அரசு கூறிவரும் நிலையில், இது டாலருக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. எப்படி இருப்பினும் பத்திர சந்தையானது சரிந்து வரும் நிலையில் இது மேற்கொண்டு டாலர் டாலர் மதிப்பில் அழுத்தத்தைக் கொடுக்கும் என்ற கருத்தும் நிலவி வருகிறது. இதற்கிடையில் தான் தங்கம் விலையானது இன்று பெரிய அளவில் சரிவினை காணாமல் தொடர்ந்து 1760 டாலர்களுக்கு மேலாகவே காணப்படுகிறது

எரிபொருள் பற்றாக்குறை

எரிபொருள் பற்றாக்குறை

சர்வதேச அளவில் நிலவி வரும் கச்சா எண்ணெய் பற்றாக்குறைக்கு மத்தியில், பணவீக்க விகிதம் அதிகரிக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கத்தின் மதிப்புக்கு ஊக்கத்தை அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தங்கத்தின் விலையானது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

இந்திய சந்தையில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தினையடுத்து தங்கத்தின் தேவையானது, தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தங்கத்தின் விலையானது டாலருக்கு 1784 டாலர்களை தொடலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. இது தங்கத்திற்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சப்போர்ட் ரெசிஸ்டன்ஸ் லெவல்

சப்போர்ட் ரெசிஸ்டன்ஸ் லெவல்

தங்கத்தின் மதிப்பானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அதன் சப்போர்ட் லெவல் 47,000 – 46,770 ரூபாயாகவும், இதே ஏற்றம் காணும் போது 47,440 – 47,650 ரூபாய் வரை ஏற்றம் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

COMEX தங்கம் விலை நிலவரம்

COMEX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த சில தினங்களாக பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாத நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 3.00 டாலர்கள் அதிகரித்து, 1762.30 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் 1759.30 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 1760.45 டாலர்களாக தொடங்கியுள்ளது.

COMEX வெள்ளி விலை நிலவரம்

COMEX வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையினை போலவே வெள்ளியின் விலையும், சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையும் கடந்த சில தினங்களாக பெரியளவில் மாற்றமில்லாத நிலையில், இன்று ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 0.82% ஏற்றம் கண்டு, 22.700 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது முந்தைய நாள் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, இன்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 45 ரூபாய் அதிகரித்து, 47,243 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 47,198 ரூபாயாகவும், இன்று காலை தொடக்கத்தில் 47,215 ரூபாயாகவும் காணப்படுகிறது. இது சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

MCX வெள்ளி விலை நிலவரம்

MCX வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது, இன்று ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 289 ரூபாய் அதிகரித்து, 61,875 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 61,586 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 61,760 ரூபாயாகவும் காணப்படுகிறது. இது சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று கிராமுக்கு 14 ரூபாய் அதிகரித்து, 4,444 ரூபாயாகவும், சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து, 35,552 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 8,000 ரூபாய்க்கும் மேல் குறைவாகத் தான் காணப்படுகிறது. ஆக இது நகை ஆர்வலர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 16 ரூபாய் அதிகரித்து, 4,848 ரூபாயாகவும், சவரனுக்கு 128 ரூபாய் அதிகரித்து, 38,784 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 48,480 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இரண்டாவது நாளாக இன்றும், விலையில் இதுவரை மாற்றம் காணவில்லை. தற்போது கிராமுக்கு 65.80 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 658 ரூபாயாகவும், கிலோவுக்கு 65,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், தினசரி கேண்டில் பேட்டர்னிலும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. அதிலும் உச்சத்தில் இருந்து 8,900 ரூபாய்க்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. ஆக இது வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.Source link

Leave a Comment