லட்சாதிபதியாக கிடைத்த நல்ல வாய்ப்பு.. ரூ.423 டூ ரூ.2,600.. 500% மேல் லாபம்.. எந்த பங்கு.. !

By


மக்கள் மத்தியில் வரவேற்பு

அதிலும் நீண்டகால நோக்கில் முதலீடு என்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினையும் பெற்றுள்ளது. ஏனெனில் நீண்டகால நோக்கில் நல்ல லாபம் கொடுக்க கூடியவையாக உள்ளன. சில குறிப்பிட்டு சொல்லும் பங்குகள் லட்சாதியாக வாய்ப்புகளை கொடுத்துள்ளன. அந்த வகையில் நாம் இன்று பார்க்க விருப்பது, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 500% மேல் லாபம் கொடுத்துள்ள ஒரு பங்கினை பார்க்கலாம்.

எந்த பங்கு?

எந்த பங்கு?

சென்செக்ஸ் இதே காலக்கட்டத்தில் 40% ஏற்றத்தில் உள்ளது. எனினும் இதே காலகட்டத்தில் மாஸ்டெக் லிமிடெட் நிறுவனத்தின் மதிப்பானது இந்த ஒரு வருட காலக்கட்டத்தில் 514% ஏற்றம் கண்டுள்ளது. இந்த பங்கின் விலையானது ஜூலை 2020ல் 423.55 ரூபாயாக இருந்த பங்கின் விலையானது ஜூலை 2021ல் 2600 ரூபாயாக உள்ளது.

எவ்வளவு முதலீடு?

எவ்வளவு முதலீடு?

கடந்த ஆண்டில் நீங்கள் இந்த பங்கில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்றைய அதன் மதிப்பு 6 லட்சம் ரூபாய்க்கு மேல். இந்த பங்கின் விலையானது ஜூலை 21, 2021ல் மட்டும் 4.3% ஏற்றம் கண்டு, ஆல் டைம் உச்சத்தினை தொட்டுள்ளது. கடந்த ஜூன் காலாண்டில் இந்த நிறுவனம் நல்ல லாபத்தினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பங்கு விலை ஏற்றம்

பங்கு விலை ஏற்றம்

கடந்த மூன்று மாதத்தில் இந்த நிறுவனம் 82% ஏற்றம் கண்டுள்ளது. இதே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 122% ஏற்றம் கண்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு 6,300 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த பங்கின் விலையானது 5 நாள், 10 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜிக்கு மேலாக காணப்படுகிறது.

ஜூன் காலாண்டில் லாபம்

ஜூன் காலாண்டில் லாபம்

கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 69.30 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 60.55 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த காலாண்டில் புதியதாக 40 வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. ஜூன் காலாண்டில் Opm மார்ஜின் விகிதமானது 21.84% அதிகரித்துள்ளது. இது கட்னத ஆண்டில் 17.64% ஆக இருந்தது.

தேவை அதிகரிக்கும்

தேவை அதிகரிக்கும்

டிஜிட்டல் தேவையானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த நிறுவனத்திற்கான தேவையும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இந்த வளர்ச்சி விகிதமானது இப்படியே தொடரலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் இதன் பங்கு விகிதமானது தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.Source link

Leave a Comment