லாபம் தான் முக்கியம்.. சிகரெட் நிறுவனத்தில் முதலீடு செய்த ராதாகிஷன் தமனி..!

By


ராதாகிஷன் தமனி

ரீடைல் துறை ராதாகிஷன் தமனி மக்களுக்கு மிகவும் குறைவான விலையில் பொருட்களை அளிக்கும் காரணத்தால் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகம் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ராதாகிஷன் தமனி சிகரெட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ்

விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ்

ராதாகிஷன் தமனி மற்றும் அவருடைய முதலீட்டு நிறுவனங்களான பிரைட் ஸ்டார் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் டிரைவ் டிரேடிங் அண்ட் ரிசார்ட்ஸ் உடன் இணைந்து சிகரெட் தயாரிக்கும் நிறுவனமான விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் சுமார் 32.3 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளார்.

32.3 சதவீத பங்குகள்

32.3 சதவீத பங்குகள்

ராதாகிஷன் தமனி மற்றும் அவரது முதலீட்டு நிறுவனங்கள் விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் செப்டம்பர் 30, 2019ல் 26 சதவீத பங்குகளை வைத்திருந்த நிலையில், ஜூன் 30, 2021ல் இதன் அளவு 30.2 சதவீதமாக உயர்ந்து தற்போது 32.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த 32.3 சதவீத பங்குகளின் மொத்த மதிப்பு 1,729 கோடி ரூபாய்.

 ஈஎஸ்ஜி பிரச்சனை

ஈஎஸ்ஜி பிரச்சனை

இந்திய சந்தையில் ஈஎஸ்ஜி (environmental, social மற்றும் corporate governance) காரணமாக விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் உட்படப் பல சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையிலும் ராதாகிஷன் தமனி இந்நிறுவனத்தின் முதலீடு செய்துள்ளார்.

விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்

விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்

விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் இன்று 3.32 சதவீதம் வளர்ச்சி அடைந்து 3,745.90 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் இதன் மதிப்பு 8.39 சதவீதம் அதிகரித்துள்ளது, ஒரு மாதத்தில் 10.29 சதவீதம், 6 மாதத்தில் 14.83 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.Source link

Leave a Comment