வலிமை அடையும் இந்திய பொருளாதாரம்.. பணவீக்க அளவீடுகள் சரிவு..!

By


சில்லறை பணவீக்கம்

இந்தியாவில் ஜூலை மாதம் சில்லறை பணவீக்கம் அளவீடுகள் 5.3 சதவீதம் வரையில் குறைய மிக முக்கியக் காரணம் உணவு பணவீக்கத்தில் ஏற்பட்டு உள்ள மிகப்பெரிய சரிவு தான். ஜூலை மாதத்தில் 4 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 3.11 சதவீதமாகக் குறைந்துள்ளது.

உணவு பணவீக்கம்

உணவு பணவீக்கம்

உணவு பணவீக்கத்தில் பிரிவில் சமையல் எண்ணெய், பருப்பு, முட்டை, மாமிசம் போன்றவற்றின் பணவீக்கம் கணிசமாக உயர்ந்திருந்தாலும், காய்கறி மீதான பணவீக்கம் 11.7 சதவீதம் சரிந்துள்ளது. இது மொத்த உணவு பணவீக்கத்தைக் குறைத்துள்ளது என மத்திய அரசின் கீழ் இயங்கும் புள்ளியியல் துறை அமைப்பு தரவுகளை வெளியிட்டுள்ளது.

4வது காலாண்டுக்குள்

4வது காலாண்டுக்குள்

ஆனால் இதே காலகட்டத்தில் எரிபொருள் மீதான பணவீக்கம் 12.95 சதவீதம் அதிகரித்தும், சேவைத் துறை பணவீக்கம் 6.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போது சூழ்நிலை தொடர்ந்தால் சில்லறை பணவீக்கம் 2021 ஆண்டின் 4வது காலாண்டுக்குள் 5 சதவீதம் அளவீட்டை விடவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 2020 காலகட்டம்

ஏப்ரல் 2020 காலகட்டம்

ஏப்ரல் 2020ல் சில்லறை பணவீக்கம் 9.9 சதவீதத்தில் இருந்து தற்போது 5.3 சதவீதமாகக் குறைந்துள்ளது, இதேபோல் உணவு பணவீக்கம் இக்காலக்கட்டத்தல் 10.5 சதவீதத்திலிருந்து 3.11 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மொத்த விலை பணவீக்கம்

மொத்த விலை பணவீக்கம்

இதேபோல் ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் அளவீடு கணிசமாக உயர்ந்து 11.39 சதவீதத்தைத் தொட்டு உள்ளது. மொத்த விலை பணவீக்கம் உயர மிக முக்கியக் காரணம் உற்பத்தி பொருட்களின் விலையில் ஏற்பட்ட உயர்வு தான். 2 மாதங்களாகக் குறைந்து வந்த மொத்த விலை பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 11.16 சதவீதத்தில் இருந்து 11.39 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்திருந்தால் ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தைக் குறைக்கவும், விலைவாசியைக் கட்டுப்படுத்தவும் வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால் தற்போது சில்லறை பணவீக்கம் குறைந்த நிலையிலும், மொத்த விலை பணவீக்கம் கணிசமாக உயர்ந்திருந்தாலும் வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயம் இல்லை.Source link

Leave a Comment