விப்ரோ நிறுவனத்தின் லாபத்தில் சரிவு.. காரணம் கேப்கோ..!

By


விப்ரோ

இந்திய ஐடி துறையின் ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதியில் 2020 முதல் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் விப்ரோ, செப்டம்பர் காலாண்டில் லாபத்தை சரிவை சந்தித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்திருந்தாலும், கேப்கோ நிறுவன கைப்பற்றுகாக அதிக தொகையை இக்காலாண்டில் செலவு செய்துள்ள காரணத்தால் லாப அளவீடுகள் சரிந்துள்ளது.

விப்ரோ லாபம்

விப்ரோ லாபம்

இதன் மூலம் விப்ரோ நிறுவனத்தின் மொத்த லாபம் 2,930.7 கோடி ரூபாயாக உள்ளது, இது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 18.9 சதவீதமாகும். ஆனால் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ள சம்பள உயர்வு மற்றும் கேப்கோ நிறுவன கைப்பற்றல் ஆகியவற்றை சேர்த்தால் லாபத்தின் அளவு 9.6 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

விப்ரோ வருவாய்

விப்ரோ வருவாய்

இதேபோல் விப்ரோ நிறுவனத்திந் மொத்த வருமானம் இக்காலாண்டில் 19,760.7 கோடி ரூபாயாக உள்ளது, இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 30.1 சதவீதமும், கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் 7.8 சதவீதமும் அதிகரித்துள்ளது.

விப்ரோ-வின் சம்பள உயர்வு

விப்ரோ-வின் சம்பள உயர்வு

இதேபோல் விப்ரோ நிறுவனம் இக்காலாண்டில் தனது 80 சதவீத ஊழியர்களுக்கு சம்பள உயர்வை கொடுத்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஓரே நிதியாண்டில் 2 முறை சம்பள உயர்வை விப்ரோ நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு அளித்துள்ளது.

விப்ரோ வாடிக்கையாளர்கள்

விப்ரோ வாடிக்கையாளர்கள்

மேலும் இக்காலாண்டில் விப்ரோ நிறுவனம் 100 மில்லியன் டாலர் பிரிவில் 2 வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது, இதோடு 75 மில்லியன் டாலர் பிரிவில் 1 வாடிக்கையாளர் என செப்டம்பர் காலாண்டில் மட்டும் சுமார் 28 வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

BFSI பிரிவு

BFSI பிரிவு

விப்ரோ நிறுவனத்தில் மொத்த ஐடி சேவை வர்த்தகத்தில் BFSI பிரிவு மட்டுமே சுமார் 34.8 சதவீத வர்த்தக ஆதிக்கத்தை செலுத்தும் நிலையில், இக்காலாண்டில் BFSI பிரிவு சுமார் 11.1 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

இதை தொடர்ந்து ஹெல்த்கேர் 5.1 சதவீதம், ENU பிரிவு 0.6 சதவீதம், டெக்லானஜி 6.5 சதவீதம், உற்பத்தி 3.1 சதவீதம், கம்யூனிகேஷன் 6.1 சதவீதம் என செப்டம்பர் காலாண்டில் வளர்ச்சி கண்டுள்ளது.

ஊழியர்கள் வெளியேற்ற விகிதம்

ஊழியர்கள் வெளியேற்ற விகிதம்

மேலும் விப்ரோ நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியேறும் எண்ணிக்கை செப்டம்பர் காலாண்டில் 20.5 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. இது ஜூன் காலாண்டில் 15.5 சதவீதமாகவும், கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் 11 சதவீதமாகவும் இருந்தது.

 விப்ரோ பங்குகள்

விப்ரோ பங்குகள்

இதைதொடர்ந்து விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலை ஏப்ரல் முதல் 59 சதவீதமும், ஜூலை முதல் 21 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் பங்கு முதலீட்டாளர்கள் அதிகளவிலான லாபத்தை பெற்றுள்ளனர்.Source link

Leave a Comment