வீட்டு வசதி திட்டம்
11வது முறையாக இன்று தமிழ்நாட்டின் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு சுமார் 3,700 தோடி ரூபாய் அளவிலான தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு. இதன் மூலம் தமிழ்நாட்டில் வீட்டு கட்டுவோர் அல்லது வாங்குவோருக்கு முறையாக நிதி சலுகை அளிக்கப்படும்.

கோவை மெட்ரோ ரயில் திட்டம்
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் பகுதி முடிந்து மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் 2வது கட்ட பணிகள் துவங்கப்பட்டு உள்ள நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் தமிழக அரசு கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 6,683 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

நெடுஞ்சாலை துறை
இதேபோல் தமிழ்நாட்டில் சேலம் – சென்னை நெடுஞ்சாலை திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இன்று தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் நெடுஞ்சாலை துறைக்கு 18,750 கோடி ரூபாய் அளவிலான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகள்
இந்த திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் வர்த்தகம் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் புதிதாக உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கையும், தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு ஆகியவை மேம்படும்.