வேலைவாய்ப்பு இழப்பு இல்லை.. துறைமுக, கப்பல் போக்குவரத்து அமைச்சர் நாயக்..!

By


கொரோனா தொற்று இருந்த போதிலும் துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறையில் எவ்விதமான வேலைவாய்ப்பு இழப்பும் இல்லை என மத்திய அமைச்சரான ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு நிறைந்த 2020ல் நாட்டின் வர்த்தகம் குறைந்த காரணத்தால் முக்கியமான துறைமுகத்தில் கப்பல் வருகை மற்றும் கண்டெய்னர் வருகை கணிசமாகப் பாதிக்கப்பட்டது, ஆனாலும் வேலைவாய்ப்பில் எவ்விதமான இழப்பு இல்லை என நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.

இதேபோல் கொரோனா மூலம் துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறையில் உயிரிழந்தோரின் துணைவியருக்கு 50 லட்சம் ரூபாய்க் கொடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் போர்ட், ஷிப்பிங், மற்றும் வாட்டர்வேஸ் துறையின் மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார்.

பஜாஜ்-ன் ஸ்மார்ட்டான திட்டம்.. புதிய திட்டத்துடன் புதிய நிறுவனம் துவக்கம்..!

கொரோனா தொற்றுக் காலத்தில் துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறையில் தொடர்ந்து தொற்றுக்கான கண்காணிப்பு செய்யப்பட்டு, தொற்றுப் பாதிப்பு உள்ளோரை ஆரம்பக்கட்டத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு, வெளிநாட்டில் இருந்து வருபவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டதால் இத்துறையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

No job loss in ports and shipping sector: Shripad Naik

No job loss in ports and shipping sector: Shripad Naik

Story first published: Thursday, July 22, 2021, 19:18 [IST]Source link

Leave a Comment