1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஜெனரல் மோட்டார்ஸ்..!

By


ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலை

புனே-க்கு அருகில் இருக்கும் Talegaon பகுதியில் இருக்கும் ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலையில் உற்பத்தி பணிகள் முழுமையாக முடக்கப்பட்ட நிலையில், இத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு நிர்வாகம் பல்வேறு சலுகை உடன் ஓய்வு திட்டத்தை அறிவித்தது.

ஊழியர்கள் பணிநீக்கம்

ஊழியர்கள் பணிநீக்கம்

ஜெனரல் மோட்டார்ஸ் நிர்வாகம் அறிவித்த ஓய்வு திட்டத்தை இந்நிறுவனத்தில் 75 சதவீத ஊழியர்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், ஜூலை 4ஆம் தேதி அனைவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த ஓய்வு திட்டத்தை ஏற்றுக்கொள்ளாத 1,086 ஊழியர்களை ஜூலை 12ஆம் தேதி பணிநீக்கம் செய்துள்ளது.

தொழிற்துறை நீதிமன்றம்

தொழிற்துறை நீதிமன்றம்

இதைத் தொடர்ந்து ஜூலை 15ஆம் தேதி தொழிற்துறை நீதிமன்றத்தில் ஊழியர்கள் அமைப்பு வழக்குத் தொடுத்துள்ளது. இந்த வழக்கு மூலம் ஜெனரல் மோட்டார்ஸ் தனது தொழிற்சாலையைச் சீன கார் தயாரிப்பு நிறுவனமான கிரேட் வால் மோட்டார்ஸ்-க்கு விற்பனை செய்யும் திட்டத்தைத் தடுக்க முயற்சி செய்து வருகிறது.

உற்பத்தி பணிகள் முடக்கம்

உற்பத்தி பணிகள் முடக்கம்

ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலையில் டிசம்பர் 2020ல் தனது உற்பத்தி பணிகளை மொத்தமாக மூடிவிட்டு, தொழிற்சாலை முழுவதையும் சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்திய சீன எல்லை

இந்திய சீன எல்லை

தற்போது கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய முதலீடுகளுக்கும், தொழிற்சாலை கைப்பற்றுவதற்கும் அரசு ஒப்புதல் அளிக்காமல் உள்ளது. இந்தியச் சீன எல்லையில் இரு நாடுகளுக்கும் மத்தியிலான மோதலில் பல வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

அரசின் புதிய கட்டுப்பாடு

அரசின் புதிய கட்டுப்பாடு

அப்போது மத்திய அரசு இந்தியாவுடன் எல்லையைப் பகிரும் அனைத்து நாடுகளின் முதலீடுகளையும் அரசு நேரடியாகத் தலையிட்டு ஒப்புதல் அளிக்கும் என்ற புதிய கட்டுப்பாட்டை விதித்தது. இந்தக் கட்டுப்பாடு அதிகப்படியாகச் சீன நிறுவனங்களைக் கட்டுப்படுத்தவே என்பதால் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் ஒப்புதல் பெற முடியாத நிலையில் உள்ளது.

ஜெனரல் மோட்டார்ஸ்

ஜெனரல் மோட்டார்ஸ்

ஜூலை 16ஆம் தேதி தொழிற்துறை நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், விற்பனையைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் இல்லையெனில் நீதிமன்றத்தில் ஸ்டே ஆர்டர் கொடுக்கப்படும் என அறிவித்தது. இதை ஜெனரல் மோட்டார்ஸ் ஏற்றுக்கொண்டு ஆகஸ்ட் 3, 2021 வரையில் எவ்விதமான வர்த்தகப் பரிமாற்றமும் செய்யாமல் காத்திருப்பதாக அறிவித்துள்ளது.Source link

Leave a Comment