Tuesday, March 2, 2021
Home Money 2 நாள் கேப் விட்ட பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு..!

2 நாள் கேப் விட்ட பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு..!


பெட்ரோல் மற்றும் டீசல் விலை

இன்று அறிவிக்கப்பட்ட விலை உயர்வின் படி இந்தியாவில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 31-35 பைசாவும், டீசல் விலை 33 -38 பைசாவும் உயர்ந்துள்ளது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது.

 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள்

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள்

நாடு முழுவதும் மக்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்துக் கடுமையான விமர்சனம் செய்து வரும் நிலையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் 2 நாட்கள் எரிபொருள் விலையை உயர்த்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். ஆனால் செவ்வாய்க்கிழமை மீண்டும் விலை உயரத் துவங்கியுள்ளது.

இதன் அடிப்படையில் டெல்லியின் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 35 பைசா உயர்த்தப்பட்டு 90.93 ரூபாய்க்கும், டீசல் 81.32 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

 5 மாநில அரசுகள்

5 மாநில அரசுகள்

மேலும் மேற்கு வங்காளம், ராஜஸ்தான், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து இன்று நாகாலாந்து மாநிலமும் மதிப்புக் கூட்டு வரியைக் குறைத்து தன் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளது. இந்த 5 மாநிலங்களும் மத்திய அரசிடம் வரியைக் குறைக்கப் பல முறை கோரிக்கை வைக்கப்பட்டும் குறைக்காத நிலையில் மாநில அரசு வருமான இழப்பை ஏற்றுக்கொண்டது.

 தமிழ்நாடு இடைக்காலப் பட்ஜெட்

தமிழ்நாடு இடைக்காலப் பட்ஜெட்

தமிழ்நாட்டில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்காலப் பட்ஜெட்-ல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியைக் குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

 பெட்ரோல் விலை நிலவரம்

பெட்ரோல் விலை நிலவரம்

இந்நிலையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை டெல்லியில் 90.93 ரூபாயாகவும், மும்பையில் 97.34 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 91.12 ரூபாயாகவும், சென்னையில் 92.90 ரூபாயாகவும், பெங்களூரில் 93.98 ரூபாயாகவும், ஹைதராபாத்தில் 94.54 ரூபாயாகவும், போபால்-லில் 98.96 ரூபாயாகவும், பாட்னாவில் 93.25 ரூபாயாகவும், ஜெய்ப்பூரில் 97.47 ரூபாயாகவும், கூர்கிராமில் 88.88 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

 டீசல் விலை நிலவரம்

டீசல் விலை நிலவரம்

இதேபோல் ஒரு லீட்டர் டீசல் விலை இன்று இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உயர்ந்துள்ள நிலையில் டெல்லியில் 81.32 ரூபாயாகவும், மும்பையில் 88.44 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 84.20 ரூபாயாகவும், சென்னையில் 86.31 ரூபாயாகவும், பெங்களூரில் 86.21 ரூபாயாகவும், ஹைதராபாத்தில் 88.69 ரூபாயாகவும், போபால்-லில் 89.60 ரூபாயாகவும், பாட்னாவில் 86.57 ரூபாயாகவும், ஜெய்ப்பூரில் 89.82 ரூபாயாகவும், கூர்கிராமில் 81.90 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

CNG விலை உயர்வு – ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

Compressed Natural Gas Price Hike: சி.என்.ஜி. ஓட்டுநர்கள். சி.என்.ஜி விலை ஒரு கிலோவுக்கு 70 பைசாவும், பி.என்.ஜி 91 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் செவ்வாய்க்கிழமை காலை முதல் நடைமுறைக்கு...

Recent Comments