2 வருடம் வரி செலுத்தாத ஜெப் பைசோஸ் விண்வெளிக்குப் பயணம்.. கடுப்பான அரசியல் தலைவர்..!

By


அமேசான் ஜெப் பைசோஸ்

அமேசான் தலைவர் ஜெப் பைசோஸ் செவ்வாய்க்கிழமை தனது 11 நிமிட விண்வெளி பயணத்திற்குப் பின் பூமிக்கு திரும்பியவர், செய்தியாளர் சந்திப்பில் முக்கியமான சில விஷயங்களைக் குறிப்பிட்டார். அது அமெரிக்க அரசியல் தலைவர்களைக் கடுப்பாக்கியுள்ளது.

 ஜெப் பைசோஸ்-ன் நன்றி

ஜெப் பைசோஸ்-ன் நன்றி

செய்தியாளர்கள் கூட்டத்தில் ஜெப் பைசோஸ், இந்த விண்வெளி பயணத்திற்குப் பணம் செலுத்தி ஒவ்வொரு அமேசான் ஊழியரையும், அமேசான் வாடிக்கையாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி எனக் கூறினார்.

 அமெரிக்கச் செனட்டார் எலிசபத் வாரன்

அமெரிக்கச் செனட்டார் எலிசபத் வாரன்

இதற்கு அமெரிக்கச் செனட்டாரான எலிசபத் வாரன், சாதாரண அமெரிக்க மக்கள் நாட்டின் வளர்ச்சிக்காக அரசுக்குக் குறிப்பிடத்தக்க வரியைச் செலுத்துவார்கள், ஆனால் அமேசான் நிறுவனமும், அதன் நிறுவனர் ஜெப் பைசோஸ்-ம் எவ்விதமான வரியும் செலுத்தவில்லை என நினைவுபடுத்தியுள்ளார்.

 எலிசபத் வாரன் டிவிட்டர்

எலிசபத் வாரன் டிவிட்டர்

மேலும் எலிசபத் வாரன் தனது டிவிட்டரில்,”ஜெப் பைசோஸ் அமெரிக்காவும், அமெரிக்க அரசும் இயங்க வரி செலுத்தும் கடுமையான அமெரிக்க உழைக்கும் அமெரிக்கர்களுக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டார், அதேபோல் அவரும் வரி செலுத்த மறந்துவிட்டார்” என டிவீட் செய்துள்ளார்.

 ப்ரோபப்ளிக்கா பத்திரிக்கை

ப்ரோபப்ளிக்கா பத்திரிக்கை

சில மாதங்களுக்கு முன்பு ப்ரோபப்ளிக்கா என்னும் பத்திரிக்கை உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆக விளங்கும் ஜெப் பைசோஸ் மற்றும் இதர அமெரிக்கப் பணக்காரர்களும் சட்டத்தில் இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒரு டாலர் கூட வரி செலுத்தாமல் உள்ளனர் எனத் தெரிவித்தது.

 அமெரிக்க நாடாளுமன்றம்

அமெரிக்க நாடாளுமன்றம்

இது அமெரிக்கா முழுவதும் காட்டுத்தீ போலப் பரவியது மட்டும் அல்லாமல் பணக்காரர்கள் மீதான வரி விதிப்பு முறை மற்றும் அளவீட்டை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தில் எழுந்து வருகிறது.

 பெரும் பணக்காரர்கள்

பெரும் பணக்காரர்கள்

அப்படி அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும் பணக்காரர்கள் மீது அதிக வரி விதிக்க வேண்டும் என நீண்ட காலமாகக் கோரிக்கை வைத்து வரும் முக்கியமானவர்களில் ஒருவர் செனட்டாரான எலிசபத் வாரன்.

 3 முக்கிய அம்சம்

3 முக்கிய அம்சம்

அமெரிக்காவில் இருக்கும் பில்லியனர்கள் மற்றும் பெரும் நிறுவனங்கள் தாங்கள் பெரும் வருமானத்திற்குக் கட்டாயம் வரி செலுத்தும் வகையில், WealthTax, Real Corporate Profits Tax, மற்றும் IRS அமைப்பிற்கு இப்பிரிவைச் சார்ந்தவர்களிடம் இருந்து வரி வசூலிக்க நீண்ட கால அடிப்படையில் நிதியுதவி செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.Source link

Leave a Comment