அருள்நிதி நடிக்கும் தேஜாவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்

By


அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்து வரும் படம் தேஜாவு. இந்த படத்திற்க்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்கு பி.ஜி முத்தையா ஒளிப்பதிவு பணிகளையும், அருள் ஈ சித்தார்த் எடிட்டிங் பணிகளையும் செய்து வருகின்றனர். அருள்நிதி (Arulnithi) நடிக்கும் தேஜாவு (Dejavu) படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

ALSO READ | ஜீவா & அருள்நீதி சேர்ந்து நடிக்கும் ‘களத்தில் சந்திப்போம்’ படத்தின் டீசர்..!

வம்சம் திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் அருள்நிதி. ஆறாவது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், களத்தில் சந்திப்போம் போன்ற படங்கள் இவருக்கு பெயர் சொல்லும் திரைப்படங்களாக அமைந்தன. க்ரைம், திகில் படங்களில் நடிப்பதில் ஆர்வம் கொண்டுள்ள அருள்நிதி, அதற்கு தகுந்தது போலவே கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அருள்நிதி நடிக்கும் தேஜாவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் ஒரு பேடில் அருள்நிதியில் புகைப்படமும், அதன் பக்கத்தில் ரத்தக்கரையும் ஒரு துப்பாக்கியும் உள்ளது. இதனால் இந்த படம் ஒரு திகில் திரைப்படம் என்பது போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது. எனவே போஸ்டரில் பல நுணுக்கங்கள் உள்ளதால் கதையில் பல சுவாரசியம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

 

 

ALSO READ | மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன்: போஸ்டர் ரிலீஸ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Leave a Comment