அந்த மனசு இருக்கே! Mentorக்கு சம்பளம் வாங்காத தோனி!

By


யுஏஇ மற்றும் ஓமானில் இந்த மாதம் நடைபெறவுள்ள டி 20 உலகக் கோப்பையின் போது இந்திய கிரிக்கெட் அணி வழிகாட்டிக்கு முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி எந்த கட்டணமும் வசூலிக்க மாட்டார் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கவிக்கும் ஐசிசி டி20 கோப்பைக்கான வீரர்கள் அறிவித்தபோது, ​​முன்னாள் கேப்டன் வழிகாட்டியாக செயல்படுவார் என்று பிசிசிஐ கூறியது. இதற்காக தோனி எந்த கட்டணமும் வசூலிக்க மாட்டார் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

40 வயதான தோனி கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், அவர் கடைசியாக  2019 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடினார்.  இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான தோனி, விக்கெட் கீப்பர்-பேட்டர் என இந்தியாவை தென்னாப்பிரிக்காவில் 2007 டி 20 உலகக் கோப்பை மற்றும் 2011 இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பையை வென்று தந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அவர் அறிவித்த ஓய்வு பற்றிய அறிவுப்பு கிரிக்கெட் உலகை சோகத்தில் ஆழ்த்தியது, அதன்பிறகு அவர் அதைப் பற்றி ஒரு முறை கூட பேசவில்லை.  ஜார்கண்டில் இருந்து வந்த தோனி இதுவரை 90 டெஸ்ட், 350 ஒருநாள் மற்றும் 98 டி 20 சர்வதேச போட்டிகளில் முறையே 4876, 10773 மற்றும் 1617 ரன்கள் குவித்துள்ளார். சர்வதேச அளவில் ஓய்வு பெற்ற பிறகு, அவர் தனது சொந்த ஊரான ராஞ்சியில் தனது ஐபிஎல் ஈடுபாடு மற்றும் இயற்கை வேளாண்மையில் கவனம் செலுத்திய வருகிறார்.  தற்போது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2021ல் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ALSO READ கேப்டனாக விராட் கோலியின் மற்றொரு சாதனை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Leave a Comment