இதென்னா ஆடுகளமா? 10 போட்டிகளில் விளையாடினால் ஒரு பேட்ஸ்மேனின் வாழ்க்கையே முடிந்துவிடும்: சஹிப் அல் ஹசன் வறுத்தெடுப்பு

By


டாக்காவில் உள்ள ஆடுகளங்கள் தரமற்றவை. இந்த ஆடுகளத்தில் 10 முதல் 15 போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேன் விளையாடினால் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்துவிடும் என்று வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் சஹிப் அல் ஹசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், மிக மோசமான டாக்கா ஆடுகளத்தில்தான் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்துக்கு எதிராக டி20 தொடரை வென்றுவிட்டதாக வங்கதேச அணியினர் உச்சி முகர்ந்துகொண்டு, பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். ஆனால், அந்த அணியின் மூத்த வீரர் சஹிப் அல் ஹசன் அந்த ஆடுகளத்தைப் படுமோசம் என்று விமர்சித்துள்ளார்.Source link

Leave a Comment