இலங்கை வீரர் லசித் மலிங்கா அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார்

By


இலங்கையின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா செவ்வாய்க்கிழமையன்று டி-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

கிரிக்கெட் விளையாட்டு வரலாற்றில் மிகச்சிறந்த டெத்-ஓவர் பந்துவீச்சாளர்களில் ஒருவரான மலிங்கா, இந்தியன் பிரீமியர் லீக் (IPL) ஏலத்திற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் (MI) அணியால் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து அவர் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், இன்று, இலங்கை வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா, காம்படீடிவ் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். முன்னதாக, மலிங்கா 2011 இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2019 ஆம் ஆண்டில், வங்கதேசத்தின் ஆர். பிரேமதாசா மைதானத்தில் ஆடிய கடைசி ஆட்டத்துடன் அவர் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.

டி-20 போட்டிகளில் தான் ஓய்வு பெறுவதை மலிங்கா தனது அதிகாரப்பூர்வ யு-டியூப் சேனல் மூலம் அறிவித்தார். இந்த வீடியோவில், இலங்கை கிரிக்கெட்டுக்கு (SLC) மலிங்கா நன்றி தெரிவித்தார். மேலும் மும்பை இந்தியன்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் கென்ட் கிரிக்கெட் கிளப் போன்ற தனது ஃபரான்சைஸ்களுக்கும் மலிங்கா வீடியோவில் நன்றி தெரிவித்துள்ளார்.

“கடந்த 17 ஆண்டுகளில் நான் பெற்ற அனுபவம் இனி இங்கு தேவைப்படாது. ஏனெனில் நான் டி 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளேன். கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் நான் ஓய்வு பெறுகிறேன். ஆனால் நான் வளர்ந்து வரும் இளைய தலைமுறையினருக்கு தொடர்ந்து ஆதரவாக இருப்பேன். இந்த விளையாட்டை விரும்பும் அனைவருடனும் நான் எப்போதும் இருப்பேன், “என்று மலிங்கா கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Leave a Comment