ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர்; இறுதிப் போட்டிக்கு செல்வது யார்?- கொல்கத்தா – டெல்லி இன்று பலப்பரீட்சை

By


ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

பிளே ஆஃப் சுற்றின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணியைவீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி.

இந்நிலையில் சென்னை அணியுடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துவதற்கான 2-வதுதகுதிச் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா – டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில் தங்களின் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே இறுதிச் சுற்றில் கால்பதிக்க முடியும்.

இரு முறை சாம்பியனான கொல்கத்தா, பெங்களூருக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றிபெற்ற நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. சுனில் நரேன், வருண் சக்ரவர்த்தி சுழல் கூட்டணி டெல்லி பேட்டிங் வரிசைக்கு கடும் சவால் கொடுக்க ஆயத்தமாக உள்ளது.

அதேவேளை, இந்தத் தொடரில் கொல்கத்தா அணியின் பேட்டிங் சீரற்ற வகையில் உள்ளது. இதை பயன்படுத்திக் கொள்வதில் டெல்லி அணி முனைப்பு காட்டக் கூடும்.

Source link

Leave a Comment