ஐபிஎல் 2021: டாப் 5 ரன் குவித்தவர்கள், விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் யார்?

By


ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி ஐபிஎல் டி20 போட்டித் தொடரின் 2-வது பாகம் தொடங்க இருக்கும் நிலையில், இந்த சீசனில் அதிக ரன் குவித்தவர்களில் ஷிகர் தவணும், விக்கெட் வீழ்த்தியதில் ஆர்சிபி வீரர் ஹர்ஸல் படேலும் முதலிடத்தில் உள்ளனர்.

ஐபிஎல் வீரர்களுக்கும், அலுவலர்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, கடந்த மே மாதம் 4-ம் தேதியோடு ஐபிஎல் போட்டிகள் திடீரென நிறுத்தப்பட்டன. இந்நிலையில் 2-வது சுற்று லீக் ஆட்டங்களையும், சூப்பர் லீக் மற்றும் இறுதி ஆட்டத்தையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 2-வது கட்ட ஐபிஎல் டி20 லீக் ஆட்டங்கள் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகின்றன. 27 நாட்கள் நடக்கும் போட்டித் தொடரில் மொத்தம் 31 ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரே நாளில் இரு ஆட்டங்கள் 7 முறை நடக்கின்றன.

இந்த ஐபிஎல் சீசனில் முதல் பாதியில் இதுவரை அதிக ரன் சேர்த்தவர்களில் முதல் இடங்கள், பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் 5 வீரர்களைக் காணலாம். அந்த வகையில் அதிக ரன்கள் குவித்த ஷிகர் தவணிடம் ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆர்சிபி வீரர் ஹர்ஸல் படேலிடம் ஊதா நிறத் தொப்பியும் உள்ளது.

அதிக ரன்கள்

  1. அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் 8 போட்டிகளில் 3 அரை சதங்கள் உள்பட 380 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் உள்ளார்.
  2. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 7 போட்டிகளில் 4 அரை சதம் உள்ளிட்ட 331 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
  3. 3-வது இடத்தில் சிஎஸ்கே அணி வீரர் டூப்பிளசிஸ் 4 அரை சதம் உள்ளிட்ட 320 ரன்களுடன் உள்ளார்.
  4. டெல்லி கேபிடல்ஸ் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா 3 அரை சதங்களுடன் 308 ரன்கள் 4-வது இடத்தில் சேர்த்துள்ளார்.
  5. 5-வது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சாம்ஸன் ஒரு சதம் உள்ளிட்ட 277 ரன்களுடன் உள்ளார்.

அதிகமான விக்கெட்

  1. அதிகமான விக்கெட் வீழ்த்திய வகையில் ஆர்சிபி அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஸல் படேல் 7 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். ஒரு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
  2. 2-வது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்ரவுண்டர் கிறிஸ்மோரிஸ் 7 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
  3. டெல்லி கேபிடல்ஸ் வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் 8 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
  4. மும்பை இந்தியன்ஸ் அணியின் லெக் ஸ்பின்னர் ராகுல் சஹர் 7 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
  5. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளர் ரஷித் கான் 7 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Source link

Leave a Comment