தொலைந்த ஏர்பாட்களை வாங்கும் இலக்குடன் அமெரிக்க ஓபன் போட்டியில் விளையாடினேன் – பட்டம் வென்ற 18 வயது இங்கிலாந்து வீராங்கனை எம்மா தகவல்

By


கோப்பையுடன் எம்மா ரடுகானு

புதுடெல்லி

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர்பிரிவில் இங்கிலாந்தைச் சேர்ந்த 18 வயதான இளம் வீராங்கனை எம்ரா ரடுகானு சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

மேலும் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தகுதிச்சுற்று வழியே முன்னேறி வந்து வாகை சூடிய முதல் போட்டியாளா் என்ற வர லாற்று சாதனையையும் அவா் படைத்திருந்தார். மேலும் 44 வருடங்களுக்குப் பிறகு கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்ற இங்கிலாந்து வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார் எம்மா ரடுகானு.

மூன்று வாரங்களுக்கு முன்பு, தனது முதல் சுற்று தகுதிப் போட்டி தொடங்குவதற்கு மூன்று நிமிடங்களுக்கு முன்னதாக தனது ஏர்பாட்களில் ஒன்றை தவறவிட்டார் எம்மா ரடுகானு.

தற்போது அவர், சாம்பியன் பட்டம் வென்று பரிசுத் தொகையாக 2.5 மில்லியன் டாலர் பெற்றுள்ளார். இதன் மூலம் எம்மா ரடுகானு தான் விரும்பும் அளவுக்கு ஏர்பாட்களை வாங்க முடியும். இறுதிப் போட்டிக்கு பிந்தைய நேர்காணலில் இதை எம்மா ரடுகானு தெரிவித்துள்ளார். இது தனது பயிற்சி அணியில் உலா வரும் நகைச்சுவை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக எம்மா ரடுகானு கூறியதாவது:

என் அணியில் ஒரு நகைச்சுவை உள்ளது, ஏனென்றால் எனது முதல் சுற்று தகுதி போட்டிக்கு முன், நான் எனது ஏர்பாட்களை இழந்தேன்.போட்டி தொடங்குவதற்கு மூன்று நிமிடங்களுக்கு முன்னர் ஓய்வறையை சுற்றி ஓடிக்கொண்டிருந்தேன், அப்போது அதை இழந்தேன்.

அப்போது நான் எனக்குள்ளே இந்த போட்டியில் நீ வெற்றி பெற்றால், நீயே ஒரு ஜோடிஏர்பாட்களை வாங்கிக் கொள்ளலாம் எனக் கூறிக்கொண்டேன். அது நகைச் சுவையாகிவிட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த 2002ம் ஆண்டு கனடாவின் டொராண்டோ நகரில் எம்மா ரடுகானு பிறந்தார். அவரது தந்தை ருமேனியாவையும், தாய்சீனாவையும் சேர்ந்தவர்கள். எம்மாரடுகானுவுக்கு 2 வயதாக இருக்கும்போது அவரது குடும்பத்தினர் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்துவிட்டனர்.

Source link

Leave a Comment