Sunday, March 7, 2021
Home Sports 2-ம் தர ஆஸி. வீரர்களை நியூஸி. வீரர்கள் எப்போதுமே கண்டுக்கமாட்டாங்க: சைமன் டோல் சீண்டல்

2-ம் தர ஆஸி. வீரர்களை நியூஸி. வீரர்கள் எப்போதுமே கண்டுக்கமாட்டாங்க: சைமன் டோல் சீண்டல்


ஐபிஎல் தொடரில் இரண்டாம் தர ஆஸ்திரேலிய வீரர்களை எப்போதுமே நியூஸிலாந்து வீரர்கள் கண்டுகொள்வதில்லை என்று நியூஸிலாந்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும் வர்ணனையாளருமான சைமன் டோல் கிண்டலான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்ட்சர்ச் நகரில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாச்தில் வென்றது. இதில் நியூஸிலாந்து அணி வீரர் கான்வே அதிரடியாக ஆடி 59 பந்துகளில் 99 ரன்கள் சேரத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென் ஆப்பிரிக்காவில் பிறந்து நியூஸிலாந்தில் குடியேறிய கான்வே 79 நிமிடங்கள் களத்தில் நங்கூரமிட்ட கான்வே 10பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை விளாசினார்.

29வயதான கான்வே, தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் பிறந்து, வளர்ந்து, அங்கு கிரிக்கெட் விளையாடி, கடந்த 2017ம் ஆண்டுதான் நியூஸிலாந்தில் கான்வே குடியேறினார்.

நியூஸிலாந்து அணிக்குள் அறிமுகமாகிய கான்வே, டி20 போட்டிகளில் தொடர்ந்து அடிக்கும் 5-வது அரைசதம் நேற்றைய ஆட்டத்தில். இதற்கு முன் 93, 91, 69, 50 ரன்கள் என 5 போட்டிகளில் கான்வே அடித்துள்ளார்.

கான்வேயின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்த இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் ” டிவன் கான்வே, 4 நாட்கள் தாமதமாக அடித்துவிட்டீர்களே ஆனாலும், என்ன அடி..” எனப் பாராட்டியுள்ளார்.

இதில் நியூஸி வீரர் கான்வே ஐபிஎல் ஏலத்தில் தன்னை பதிவு செய்திருந்தார். அடிப்படைவிலையாக ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. ஆனால், ஏலம் நடந்து முடிந்த 4 நாட்களில் நடந்த ஆஸி.க்கு எதிரான டி20 போட்டியில் கான்வே காட்டடி அடித்து அனைவரையும் திகைக்கவைத்துள்ளார். இப்படிப்பட்ட வீரரையா ஏலத்தில் தவறவிட்டோம் என ஐபிஎல் அணிகளை சிந்திக்க வைத்துள்ளார்.

சைமன் டோல்

, கான்வேயின் ஆட்டம் குறித்து நியூஸிலாந்து முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சைமன் டோல் ட்விட்டரில் தெரிவித்த கருத்தில் ” ஐபிஎல் தொடரில் 2-ம் தர ஆஸ்திரேலிய வீரர்களை நியூஸிலாந்து வீரர்கள் தொடர்ந்து கண்டுகொள்ளவதே இல்லை.

நான் எந்த வீரரையும் குறிப்பிடவில்லை. ஆதலால் ட்ரால் செய்வதை நிறுத்துங்கள். ஐபிஎல் தொடங்கியதிலிருந்து 94 ஆஸ்திரேலிய வீரர்கள் ரூ.886 கோடிக்கு ஏலம் போயுள்ளார்கள். ஆனால், 31 நியூஸிலாந்து வீரர்கள் ரூ.212 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

இரு அணிகளிலும் 6 முதல்தர அணிகள் இருக்கின்றன, டி20 அணிகளும் இருக்கின்றன. பிக்பாஷ் லீக் பார்ப்பதும், நேரமும் அதிகரிக்கணும்” எனத் தெரிவித்துள்ளார்.

14-வது ஐபிஎல் ஏலத்தில் நியூஸிலாந்து வீரர் கைல் ஜேமிஸன் ரூ.15 கோடிக்கு ஆர்சிபி அணியாலும், மும்பை இந்தியன்ஸ் அணியால் ஆடம் மில்னி ரூ.3.2 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் என்ன?

2021ஆம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. கரோனா...

Royal Challengers Bangalore IPL 2021 Fixtures

Here's the complete list of fixtures, venues and match timings for the Virat Kohli-led Royal Challengers Bangalore1. 09-04 – Chennai – Mumbai Indians...

ரிலையன்ஸை துரத்தும் டிசிஎஸ்.. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிறுவனங்கள் எது?

<!----> டாப் 10 நிறுவனங்கள் இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது. இதே அடுத்தடுத்த...

Recent Comments