Saturday, February 27, 2021
Home Sports IND vs Eng: மூன்றாவது டெஸ்டில் தோனியின் இந்த சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி

IND vs Eng: மூன்றாவது டெஸ்டில் தோனியின் இந்த சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி


புதிதாக புதுப்பிக்கப்பட்ட மோட்டேரா மைதானத்தில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் நடக்கவிருக்கிறது. இந்த போட்டி பல வகைகளில் சிறப்பம்சம் வாய்ந்ததாக இருக்கும். புதன்கிழமை (பிப்ரவரி 24) துவங்கவிருக்கும் பகல் / இரவு டெஸ்ட் போட்டி இஷாந்த் ஷர்மாவின் 100 வது டெஸ்ட் போட்டியாகும். மேலும், இதில் இந்தியா வெற்றி பெற்றால், இந்தியாவில் நடந்த போட்டிகளில் மிகச் சிறந்த கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெறுவார். தற்போது இந்த சாதனை எம்.எஸ் தோனியிடம் உள்ளது.

கோலி மற்றும் தோனி இருவரும் இந்திய அணிக்கு தலைமை தாங்கி, கேப்டனாக 21 போட்டிகளில் வென்றுள்ளனர். தோனி ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால், தற்போது நடந்துகொண்டிருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் புகழ்பெற்ற விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தோனியின் சாதனையை கோலி முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இதுபோன்ற ரெகார்டுகளுக்காக தான் விளையாடுவதில்லை என விராட் கோலி (Virat Kohli) கூறினார். “ஒரு கேப்டனாக ரெகார்டுகளை உடைப்பது எனக்கோ அல்லது எந்த வீரருக்குமோ முக்கியம் அல்ல. இது எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பு. நான் என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறேன். இப்படித்தான் இதுவரை நான் இருந்துள்ளேன். இனிமேலும் இப்படித்தான் இருப்பேன். வெளியிருந்து பார்க்கும்போது இது மிகப்பெரியதாகத் தெரியலாம். ஆனால், எனக்கு இவை முக்கியமல்ல” என்று போட்டிக்கு முன்பு செவ்வாயன்று (பிப்ரவரி 23) நடந்த மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பில் கோலி கூறினார்.

ALSO READ: Ind vs Eng: 5 போட்டிகள் கொண்ட T20I இந்திய அணி அறிவிப்பு

“நானும் எம்.எஸ். தோனியும் சிறந்த நட்பைப் பகிர்ந்து கொள்கிறோம். எங்களுக்கிடையில் பரஸ்பர மரியாதை அதிகமாக உள்ளது. இந்த மைல்கற்களை விட அது எப்போதும் முக்கியமானது. இந்திய அணியை முதலிடம் வகிக்கவைப்பதற்கான பொறுப்பு எனக்கு இருக்கிறது. எனக்குப் பிறகு இந்த பொறுப்பை ஏற்கும் அனைவருக்கும் இது பொருந்தும்” என்று இந்திய கேப்டன் மேலும் கூறினார்.

இந்த ஆண்டு இறுதியில் முதல் ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி நடக்கவுள்ளது. இதில் நியூசிலாந்திற்கு எதிராக விளையாட தகுதிபெற வேண்டுமானால், இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றொரு வெற்றியைப் பெற வேண்டியது மிக முக்கியமாகும். நான்கு போட்டிகளைக் கொண்ட இந்த தொடரை 1-1 என்ற நிலையில் சமன் செய்துள்ளது. சென்னையில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணியை 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. WTC இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்தியா நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 அல்லது 3-1 என்ற கணக்கில் வெல்ல வேண்டும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு வருவதற்கான வாய்ப்பைப் பற்றி பேசிய கோலி, அடுத்து ஆடவிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் (IND vs Eng Test Series) வெற்றிபெற விரும்புவதாக வலியுறுத்தினார். ஆனால் இப்போதைக்கு அடுத்த போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

“அந்த காரணங்களுக்காக நீங்கள் விளையாட முடியாது. நாங்கள் இரு ஆட்டங்களையும் வெல்ல விரும்புகிறோம். ஒன்றை வென்று மற்றொன்றை டிரா செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இதைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாங்கள் இப்போது சிந்திக்கவில்லை”என்று கோலி கூறினார்.

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் புதன்கிழமை (பிப்ரவரி 24) மதியம் 2.30 மணி முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படும்.

ALSO READ: IPL Auction 2021: அற்புதமான 3 தொடர்ச்சியான சிக்ஸர்கள், யார் அந்த வீரர்?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments