அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு

By


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது  லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

அதிமுக (AIADMK) ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் (MR Vijayabhaskar).  2016 ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்பொடி நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு திமுகவின் செந்தில் பாலாஜியிடம் தோல்வியை தழுவினார்.

ALSO READ | அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் ரெய்டு

இவர் அமைச்சராக இருந்தபோது கோடிக்கணக்கில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் 20 இடங்களிலும் சென்னையில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் ஆர்.ஏ.புரம் சாய்பாபா கோயில் அருகே அமைந்துள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஆர்.ஏ.புரம் சாய்பாபா கோயில் அருகே அமைந்துள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. 

ALSO READ | ADMK EX Minister: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Leave a Comment