இங்கிலாந்தில் மேலும் 44,104-பேருக்கு கொரோனா பாதிப்பு || tamil news 44,104 people in the UK are affected by corona infection

Byஇங்கிலாந்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 55,63,006- ஆக உயர்ந்துள்ளது.

லண்டன்:

இங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா பரவல் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.  கடந்த வாரத்தில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்தது. 

இந்த நிலையில், கடந்த சில  தினங்களாக 50 ஆயிரத்திற்கு சற்றும் குறைவாக கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 44,104-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 73- பேர் உயிரிழந்துள்ளனர். 

இங்கிலாந்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 55,63,006- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 128,896- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,419,868- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 10,14,242- ஆக உள்ளது. 


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment