இந்தியாவின் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்பு || Over 30 Countries Agree To Recognise India’s Covid Vaccine Certificates Report

Byஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி சான்றிதழுக்கு 30-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் மிகப்பெரிய அளவில் செலுத்தப்பட்டு வருகின்றன. ஸ்புட்னிக் வி போன்ற தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி சான்றிதழ்கள் பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்தது. இதனால் தொழில் சார்பாக வெளிநாடு செல்பவர்கள், படிப்பு தொடர்பாக வெளிநாடு  செல்பவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதனால் பல்வேறு நாடுகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. 

இந்நிலையில், இந்திய கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களுக்கு பரஸ்பர அங்கீகாரம் வழங்க 30 நாடுகள் ஏற்றுக்கொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நேபாளம், பெலாரஸ், லெபனான், அர்மெனியா, உக்ரைன், பெல்ஜியம், ஹங்கேரி, செர்பியா போன்ற நாடுகள் ஏற்றுள்ளது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment