ஈரானில் 87 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா பலி எண்ணிக்கை || Tamil News Coronavirus death case crosses 87000 in Iran

Byஈரான் நாட்டில் கொரோனா வைஸ் தொற்றால் ஒரே நாளில் 27,444 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

டெஹ்ரான்:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் தற்போது 13-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஈரானில் ஒரே நாளில் 27,444 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் 35 லட்சத்து 76 ஆயிரத்து 148 ஆக உள்ளது. 250 பேர் பலியானதால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து 31.68 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 3.19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment