உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி என்ன ஆகும்?

By


உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் சுமூகமாகப் பேசி முடிவுகளை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களை திமுக அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :

நடைபெறவுள்ள 9 மாவட்ட “ஊரக உள்ளாட்சி தேர்தலில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன் உள்ளாட்சி அமைப்பு இடங்கள் குறித்து பேசி சுமுக முடிவு செய்ய வேண்டுமென மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ALSO READ : உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி – தேமுதிக-வின் பலம் என்ன?

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் : நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக உடனான கூட்டணி தொடரும் என்று தெரிவித்துள்ளார். மற்றும் அவசரநிலைக் காலக் கட்டத்தில் கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றிதே நீட் தற்கொலைக்கான முக்கிய காரணமாக உள்ளது எனக் குற்றம் சாட்டினர்.

மேலும் அவர் கூறுகையில் “நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் திமுக தலைமையிலான அரசுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் எனவும்  இழந்த உரிமையை மீட்டெடுப்போம் எனவும் அவர் கூறினார்.

ALSO READ : தொடங்கியது அதிமுக – பாமக மோதல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

 

Source link

Leave a Comment