உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக எழுச்சி பெறும் – விஜயகாந்த்

By


தமிழகத்தில் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகள் என இருகட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 6ம் தேதியும், தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 9ம் தேதியும் தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மேலும், வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்குகிறது.  பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 12ம் தேதி எண்ணப்படுகிறது.

இன்னிலையில், தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர அது வீழ்ச்சி அல்ல என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். வருகிற உள்ளாட்சித் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பலத்தை நாம் அனைவருக்கும் நிச்சயமாக நிரூபிப்போம். அடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களிலும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் மீண்டும் எழுச்சி பெறும் மக்களுக்காக நல்ல நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட கட்சி தேசிய முற்போக்கு திராவிட கழகம். எனவே நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் என்று ஒலியோடு நாம் அனைவரும் பயணிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு பயத்தால் மேட்டூர் அருகே தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன்.  நீட்தேர்வு என்பது வாழ்க்கையில் ஒரு பாதி தான் அதில் தோல்வி வந்தால் மனம் தளராமல், மன உறுதியுடன், விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.  ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியினரும் நீட் தேர்வுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ Local Body Election: உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி – காட்சிகள் மாற வாய்ப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Leave a Comment