எய்ம்ஸ் மருத்துவமனை சென்ற ராகுல் காந்தி – மன்மோகன் சிங் உடல்நிலை விசாரித்தார் || Tamil News Rahul Gandhi visits former PM Manmohan Singh at AIIMS in Delhi

Byமத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா எய்ம்ஸ் மருத்துவமனை சென்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நலம் விசாரித்தார்.

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மத்திய  சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா எய்ம்ஸ் மருத்துவமனை சென்று மன்மோகன் சிங்கிடம் நலம் விசாரித்தார். 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குணமடைய வேண்டும் என பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சென்றார். அங்குள்ள டாக்டர்களிடம் மன்மோகன் சிங்குக்கு அளித்து வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment