எழும்பூர் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: மீட்பு பணியில் காவல்துறையினர்

By


Tamil News: சென்னை சென்னை எழும்பூரில் உள்ள தனியார் அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ விபத்து திடீரென 3வது மாடியில் உள்ள கம்பியூட்டர் சர்வீஸ் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் பல நிறுவனங்கள் அமைந்துள்ளன. மளமளவென வேகமாக தீ பரவியதால், மற்ற கட்டத்தில் தீ பரவாமல் இருக்க,  ராட்சத கிரேன் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் அடுக்குமாடி கட்டத்தில் சிக்கி உள்ள ஊழியர்களை ராட்சத கிரேன் மூலம் தீயணைப்பு வீரர்கள் வெளியேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தீ விபத்தில் மீட்பு பணிகளில் குறித்து காவல்துறை இணை ஆணையர் ராஜேந்திரன் ஐபிஎஸ், துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் அதிகாரிகள் சம்ப இடத்திற்கு நேரில் வந்து மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் ஒரு மணி நேரமாக தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Leave a Comment