கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகள் || Tamil News Local Body Elections will be held 2 phases in Kallakkurichi

Byகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக அக்டோபர் 6-ந் தேதி ரிஷிவந்தியம், திருநாவலூர், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

கள்ளக்குறிச்சி:

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6-ந் தேதி மற்றும் 9-ந் தேதி ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மாவட்ட ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகள், கிராம ஊராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி வார்டுகள் ஆகியவற்றிற்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இதில் முதல் கட்டமாக அக்டோபர் 6-ந் தேதி ரிஷிவந்தியம், திருநாவலூர், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

இதேபோல் 9-ந் தேதி 2-ம் கட்டமாக சின்னசேலம், கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை, சங்கராபுரம், தியாகதுருகம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment