குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை – மோகன் பகவத் || Tamil news Muslims not affected by Citizenship Amendment Act says Mohan Bhagwat

Byஅண்டை நாடுகளில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை திருத்த சட்டம் பாதுகாப்பு அளிக்கும் என்று மோகன் பகவத் கூறினார்.

கவுகாத்தி:

அசாமில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “  1930-ல் இருந்தே முஸ்லீம்களின் மக்கள் தொகையை அதிகரிக்க முயற்சி நடைபெற்று வருகிறது. நாட்டில் முஸ்லீம்கள் ஆதிக்கத்தை நிறுவும் நோக்கத்திலும் இந்த நாட்டை பாகிஸ்தானாக்கும் நோக்கத்திலும் இந்த முயற்சி நடைபெற்று  வருகிறது. பஞ்சாப், அசாம் மற்றும் வங்காளம் ஆகிய இடங்களில் திட்டமிடப்பட்டது. குறிப்பிட்ட அளவுக்கு இது வெற்றியும் பெற்றுள்ளது. 

குடியுரிமை சட்டத்தால், முஸ்லிம்கள் எந்த பாதிப்பையும் சந்திக்க மாட்டார்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.) மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (என்.ஆர்.சி.) ஆகியவை அரசியல் காரணமாக சிலரால் பிரச்னையாக்கப்பட்டு வருகிறது. குடியுரிமைச் சட்டத்தால் எந்தவொரு முஸ்லிமும் எந்த இழப்பையும் சந்திக்க மாட்டார். குடியுரிமைச் சட்டம் என்பது அண்டை நாடுகளில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பை வழங்கும்.

அண்டை நாடுகளில் இருக்கும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து துரத்தப்படும்போது, நாம் அடைக்கலம் கொடுத்தாக வேண்டும். அவர்களுக்கு இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் பாதுகாப்பு வழங்கும்” என்றார். 


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment