கோவை மாவட்டத்தில் குறைகிறது கொரோனா தொற்று || Tamil News Coronavirus infection declined in Coimbatore

Byகொரோனா பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று 202 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.

கோவை:

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட எல்லையில் உள்ள 13 சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறையினர் முகாம்கள் அமைத்து வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் மாவட்டம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்எச்சரிக்கைகள் குறித்து, அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். அரசின் வழிகாட்டு முறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை சுகாதாரத்துறையினர் கண்காணித்து முகாம்களை அமைத்து பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த 8-ந் தேதி 232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 9-ந் தேதி 224 பேருக்கும், 10-ந் தேதி 235 பேருக்கும், 11-ந் தேதி 224 பேருக்கும், 12-ந் தேதி 212 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நேற்று 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 976 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டம் முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று 202 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 285 ஆக உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக 2,192 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment