சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது – எடப்பாடி பழனிசாமி || Tamil News Edappadi-Palanisamy says AIADMK cannot be overthrown

Byஆரம்பக் காலத்தில் விழிப்புணர்வு இல்லாமல் கொரோனா தடுப்பூசி வீணடிக்கப்பட்டது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம்:

சேலம் மாவட்டம் எடப்பாடியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றி விட்டது. வாக்குகளைப் பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தி.மு.க. மக்களை ஏமாற்றி விட்டது.

சசிகலா எத்தனை பொய்யான தகவல்களைப் பரப்பினாலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது. சசிகலா அ.தி.மு.க.விலிருந்த காலகட்டத்திலும் தேர்தலில் அ.தி.மு.க .தோல்வியைச் சந்தித்துள்ளது.

கொரோனா தடுப்பூசிகளை நாங்கள் வேண்டுமென்றே வீணடிக்கவில்லை. ஆரம்பக் காலத்தில் விழிப்புணர்வு இல்லாமல் கொரோனா தடுப்பூசி வீணடிக்கப்பட்டது என தெரிவித்தார்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment