சென்னை முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்- தெரிந்துகொள்ளுங்கள்

By


சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப்பணி, கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் முதல், ஆற்காடு சாலை 80 அடி சாலை சந்திப்புவரை நடைபெறவிருப்பதால் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. 

இது தொடர்பாக சென்னை (Chennai Traffic Police) போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை கூறியதாவது.,

ALSO READ | கோடம்பாக்கம் – பூந்தமல்லி மெட்ரோ சேவை 2025 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும்  – PTR

சென்னை மெட்ரோ (Chennai Metro) ரயில் 2 ஆம் கட்டப்பணி, கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் முதல், ஆற்காடு சாலை 80 அடிசாலை சந்திப்புவரை நடைபெறவிருப்பதால், கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் நாளை (14ம் தேதி) முதல் ஓராண்டிற்கு அமல்படுத்தப்படவுள்ளது.  

* போரூர் மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றம் எதுவுமில்லை. 

* கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து போரூர் சாலிகிராமம் நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், பவர் ஹவுஸ் சந்திப்புவரை சென்று, இடதுபுறம் திரும்பி, அசோக் நகர் காவல் நிலையம் வரைசென்று, வலது புறம் திரும்பி, 2வது அவென்யூ சாலை வழியாக ராஜன் சாலை, ராஜ மன்னார் சாலை, 80 அடிசாலை வன்னியர் சாலை வழியாக செல்லலாம்.

* கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து, வடபழனி சந்திப்பு நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், பவர் ஹவுஸ் சந்திப்புவரை சென்று, இடதுபுறம் திரும்பி, அம்பேத்கர் சாலையில், அசோக் நகர் காவல் நிலையம் வரைசென்று, வலதுபுறம் திரும்பி, 2-வது அவென்யூ சாலை, 100 அடி சாலை வழியாக சென்று வடபழனி சந்திப்பு செல்லலாம்.

* வடபழனி சந்திப்பிலிருந்து, ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், துரைசாமி சாலைக்கு வலதுபுறமாக திரும்பக் கூடாது. மாறாக பவர் ஹவுஸ் சந்திப்பு, அம்பேத்கர் சாலை, அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பிச் செல்லலாம்.

* அசோக் பில்லரிலிருந்து, கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், அம்பேத்கர் சாலையில், அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்புவரை சென்று, இடதுபுறம் திரும்பி 2-வது அவென்யூ சாலை, துரைசாமி சாலை, ஆற்காடு சாலை வழியாக செல்லலாம்.

* ஆற்காடு சாலை, துரைசாமி சாலை சந்திப்பிலிருந்து, பவர் ஹவுஸ் சந்திப்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள், வழக்கம்போல அனுமதிக்கப்படும். ஆனால், பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து, ஆற்காடு சாலை துரைசாமி சாலை சந்திப்பிற்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. (ஒரு வழி பாதை). 

* வாகனங்கள், அம்பேத்கர் சாலை 2-வது அவென்யூ சாலை சந்திப்பிலிருந்து 2-வது அவென்யூ சாலை 100 அடி சாலை சந்திப்பிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், 2-வது அவென்யூ சாலை 100 அடி சாலை சந்திப்பிலிருந்து அம்பேத்கர் சாலை 2-வது அவென்யூ சாலை சந்திப்பிற்கு செல்ல அனுமதியில்லை. (ஒரு வழி பாதை). 

* வாகனங்கள் அம்பேத்கர் சாலையில், பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து அசோக் நகர் காவல் நிலைய சந்திப்பு நோக்கி அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்பிலிருந்து, பவர் ஹவுஸ் சந்திப்பிற்கு செல்ல அனுமதியில்லை. (ஒரு வழி பாதை). 

ALSO READ | TN corona update District Wise செப்டம்பர் 12: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Leave a Comment