டிஎன்பிஎல் கிரிக்கெட்… 6 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தியது மதுரை || TNPL 2021, DDvSMP, Madurai Panthers won by 6 wkts

Byமுதலில் ஆடிய திண்டுக்கல் அணி, மதுரை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 96 ரன்களில் சுருண்டது.

சென்னை:

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் நான்காவது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய திண்டுக்கல் அணி, மதுரை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 96 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் மணி பாரதி 26 ரன்கள் சேர்த்தார். ஹரி நிஷாந்த் 19 ரன்களும், விவேக் 11 ரன்களும் அடித்தனர்.

இதையடுத்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. துவக்க வீரர் அருண் கார்த்திக் 22 ரன்கள் சேர்த்தார். ராஜ்குமார் (3), அனிருத் சீதாராம் (4) ஆகியோர் விரைவில் விக்கெட்டை இழந்தபோதும், ஜெகதீசன் கவுசிக் பொறுப்புடன் ஆடி 31 ரன்கள் சேர்த்தார்.

சதுர்வேத் 18 ரன்களும் (நாட் அவுட்), ஷாஜகான் 11 ரன்களும் (நாட் அவுட்) எடுக்க, மதுரை அணி 30 பந்துகள் மீதமிருந்த நிலையில், 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment