ட்விட்டர் கணக்கு ஹேக்கிங் தொடர்பாக குஷ்பு தமிழக டிஜிபியிடம் புகார்

By


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையும், அரசியலிலும் பிரபலமாகவும் இருக்கும் குஷ்பு சுந்தரின் (Kushboo Sundar) ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைவரும் நடிகையுமான குஷ்பு சுந்தரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக அவர் இன்று மாலை 3 மணியளவில் தமிழக டிஜிபியை சந்தித்து ஹேக்கிங் குறித்து புகார் அளிக்கிறார்.

இது குறித்து ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய குஷ்பு சுந்தர், ‘ அனைத்து ட்வீட்களும் இந்த ஹேக்கரால் நீக்கப்பட்டன அல்லது காப்பகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் மூலம் வெறுப்பை பரப்பவோ, வன்முறையைத் தூண்டவோ அல்லது தனிப்பட்ட முறையில் ஒருவரைத் தாக்கவோ பயனபடுத்தப்படாமல் இருக்க வேண்டும் என்ர அச்சம் உள்ளது. இது எந்தவொரு தேச விரோத செயலுக்கும் பயன்படுத்தப்படக்கூடாது என்ற அச்சம் உள்ளது’ எனவும் தெரிவித்தார்.

இப்போது, ட்விட்டர் கணக்கில்ல் புகைப்படம் போன்றவை முன்னர் இருந்த நிலைக்கு திரும்பினாலும், தன்னால் தனது ட்விட்டர் கணக்கை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். 

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். திமுக (DMK) வேட்பாளர் மருத்துவர் எழிலனை எதிர்த்து போட்டியிட்ட அவர் கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டும் குஷ்பு தோல்வியை தழுவினார். தேர்தலுக்குப் பிறகு சற்று அரசியலில் இருந்து விலகியே இருந்து வரும் இவர் ட்விட்டரில் மட்டும் கருத்து தெரிவித்து வந்தார்.

ALSO READ | என்னைப் பார்த்து நீங்கள் பயந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல: கார்த்தி சிதம்பரத்துக்கு குஷ்பு பதிலடி

குஷ்புவின் (Kushboo), ட்விட்டர் அக்கவுண்ட் முடக்கப்பட்டு, அதில் இருந்த பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. குஷ்புவை ட்விட்டர் பக்கத்தில் 13 லட்சம் பேர் தொடர்ந்து வந்தனர். அவர் 710 பேரை தொடர்ந்து வருகிறார். அவரது கணக்கு முடக்கப்பட்டு @khushsundar என்பதற்கு பதிலாக @briann என்கிற பெயரில் உள்ளது. 

ஏற்கனவே கடந்த அண்டு ஏப்ரல் 7 ஆம் தேதியும் குஷ்புவின் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டது.

நடிகை குஷ்பு. தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | புதிய சாதனையை படைத்த நடிகர் தனுஷ்; ட்விட்டரில் அசுரத்தனமான ஃபாலோயர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் ட்விட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Leave a Comment