தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு || Tamil News Gold Price Hike

Byசென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,728-க்கு விற்பனையாகிறது.

சென்னை:

தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு காணப்பட்டு வருகிறது. நேற்று ஒருபவுன் ரூ.35 ஆயிரத்து 472-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்தது.

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.35 ஆயிரத்து 728-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 466 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.67 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.70-க்கு விற்கிறது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment